நான் அம்பேத்கரின் பிள்ளை பெரியாரின் மாணவன்! காலாவதியானவர்களின் கூட்டமே பாஜக- திருமாவளவன்

 

நான் அம்பேத்கரின் பிள்ளை பெரியாரின் மாணவன்! காலாவதியானவர்களின் கூட்டமே பாஜக- திருமாவளவன்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், “தமிழகத்தில் 7400 மருத்துவ இடங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிகமாக கல்வி நிறுவனங்கள் உள்ள மாநிலம் பட்டியல் தமிழகமும் ஒன்று. இந்த ஆண்டு மோடி அரசாங்கம் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கொள்கை முடிவு எடுத்திருந்தால் 516 ஓபிசி மாணவர்கள் கூடுதலாக சென்றிருப்பார்கள். ஊடகத் துறையில் பணிபுரியும் பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி‌ சேகர் மீது ஏதாவது நடவடிக்கை இதுவரை எடுத்தது உண்டா? பெரியார் சிலை மீது காவி சாயம் பூசுகிறார்கள், அம்பேத்கர் மீது காவி சாயம் பூசுகிறார்கள் இதுதான் பாஜக சமூக தொண்டா.? எவ்வளவு வன்முறையை நீங்கள் தூண்டி விட்டாலும் தமிழகத்தில் நீங்கள் நினைத்தது நடக்காது.

நான் அம்பேத்கரின் பிள்ளை பெரியாரின் மாணவன்! காலாவதியானவர்களின் கூட்டமே பாஜக- திருமாவளவன்

வடமாநிலத்தில் நீங்கள் பரப்பியதை போல மதவெறியை தூண்டி விட்டு, வன்முறையை தூண்டி விட்டு நீங்கள் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்காதீர்கள். தமிழகம் பெரியார் மண், சமூகநீதி மண்.. காலாவதியானவர்களின் கூடாரமாக தமிழக பாஜக உள்ளது. ஓய்வு பெற்ற ஐபிஎஸ், ஓய்வு பெற்ற நடிகை போன்றவர்கள்தான் பாஜகவில் உள்ளனர். பெரியார் இன் சோஷியல் ஜஸ்டிஸ் என்ற தலைப்பில் என்னை பேச சொன்னார்கள். அப்போது மனுஸ்மிருதி குறித்து பேசினேன். அந்த நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் மனுஸ்மிருதியை படித்தார், ஆத்திரப் பட்டார், உடனே தீயிட்டுக் கொளுத்தினார்.

நான் அம்பேத்கரின் பிள்ளை பெரியாரின் மாணவன். அம்பேத்கருக்கு பிறந்த நாளும் நினைவு நாளும் கொண்டாடும் கட்சிதான் பாஜக.அம்பேத்கர் ஏன் மனுஸ்மிருதியை கொளுத்தினார் என்று பாஜக முதலில் அறிந்து கொள்ளட்டும்.. நான் முஸ்லிமா, கிறிஸ்டினா, முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி பேச? இந்த சமூகத்தில் நான் ஒரு இந்து. அம்பேத்கர் ஒரு இந்துவாக இருந்ததால் தான் அவர் மனுஸ்மிருதியை எதித்தார். பெரியார் ஒரு இந்துவாக இருந்ததால் தான் மனுஸ்மிருதி எரித்தார். கொச்சை படுத்த வேண்டும் என்பதெல்ல எங்களது நோக்கம். கல்வியில் பெண்களுக்கான முன்னுரிமை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசுவதாக கூறுகிறார்கள்” என ஆவேசமாக கூறினார்.