ஒரே ஒருநாள் ராம்நாத் கோவிந்தை பிரமராக்க முடியுமா? – மோடிக்கு திருமா கேள்வி

 

ஒரே ஒருநாள் ராம்நாத் கோவிந்தை பிரமராக்க முடியுமா? – மோடிக்கு திருமா கேள்வி

ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த அரசியல் பிள்ளை தான் பாஜக, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் என தெரிவித்தார்.

ஒரே ஒருநாள் ராம்நாத் கோவிந்தை பிரமராக்க முடியுமா? – மோடிக்கு திருமா கேள்வி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டகவுண்டம்பட்டியில் பெரியார் மற்றும் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இட ஒதுக்கீடு பெறும் அனைத்து சமூகத்தினரும் பட்டியல் சமூகத்தினர்தான். சமூக நீதி என்ற கருத்தியல் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சமூக நீதி என்ற சொல்லுக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்கும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் நியாயமாக கிடைக்கும் நீதியே சமூக நீதியாகும். வரலாற்றோடு பார்த்தால் தான் சமூக நீதியின் அடிப்படை புரியும். வாய்ப்பும் வசதியும் இல்லாத காரணத்தால்தான் தாழ்வு மனப்பான்மையால் படிப்பை பாதியில் நிறுத்தி விடும் சூழல் ஏற்படுகிறது. ஒடுக்கு முறை என்பதை பொது உளவியலாக மாற்றப்பட்டதால் உழைப்பு சுரண்டலும், மூளைச் சுரண்டலும் நடத்தப்பட்டது.

ராம்நாத் கோவிந்த்தை ஒரே ஒரு நாள் பிரதமர் ஆக்க முடியுமா என மோடிக்கு சவால் விடுக்கிறேன்,மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. அதேபோல் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் அவ்வளவுதான். ஆர் எஸ் எஸ் பெற்றெடுத்த அரசியல் பிள்ளை தான் பாஜக, பாஜகவை செயல்படுத்துவது ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், ஆண்கள் மத்தியில் நிமிர்ந்து நின்று அரசியல் செய்த அவரிடம் எவ்வளவு ஆளுமை இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும், அதனை மறுக்க முடியாது. வாய்ப்புக் கொடுத்தால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சாதித்துக் காட்டுவார்கள்.

நாடு முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திமுக, விசிக என அனைத்தும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக செயல்பட்டால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற முடியும். நாடு முழுவதும் விசிக இல்லை என்றாலும் கருத்தியியல் அடிப்படையில் பல்வேறு கட்சிகள் அமைப்புகள் விசிகவோடு உள்ளது” எனக் கூறினார்.