Home அரசியல் "உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி" - கொதித்தெழுந்த திருமாவளவன்!

“உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி” – கொதித்தெழுந்த திருமாவளவன்!

உயர் கல்வித் துறையில் எஸ்.சி., எஸ்.டி. , முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த ஆண்டறிக்கையை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2019-20-க்கான ஆண்டறிக்கை தற்போது வெளிவந்துள்ளது.

"உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி" - கொதித்தெழுந்த திருமாவளவன்!
பாமகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவுக்குதான் பாதிப்பு ஏற்படும்'' –  திருமாவளவன் பேட்டி | No Use For Pmk Alliance With Admk Said Vck President  Thirumavalavan - NDTV Tamil

அதில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, உயர் கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

2014- 15ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி இந்தியாவில் மொத்தமுள்ள 14,73,255 ஆசிரியர் பணியிடங்களில் எஸ்.சி. பிரிவினர் 7.1%, எஸ்டி பிரிவினர் 2.1%, முஸ்லிம்கள் 3.2 % இருப்பது தெரியவந்தது. தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கையில் இந்தியா முழுவதும் உயர் கல்வித்துறையில் 15,03,156 பேர் ஆசிரியர்களாகப் பணிபுரிவது தெரியவந்துள்ளது. அதில், எஸ்.சி. பிரிவினர் 9%, எஸ்.டி. பிரிவினர் 2.4%, முஸ்லிம்கள் 5.6% உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

மதவாத, சாதியவாத சக்திகளுடன் எக்காரணம் கொண்டும் தேர்தல் உறவை வைத்துக்கொள்ள  மாட்டோம்; திருமாவளவன் திட்டவட்டம் | Thirumavalavan on PMK - hindutamil.in

2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எஸ்.சி. பிரிவினர் 16.6 விழுக்காடும், எஸ்.டி. பிரிவினர் 8.6 விழுக்காடும் உள்ளனர். அதுபோல, முஸ்லிம்கள் 14.2 விழுக்காடு உள்ளனர். இந்திய அளவில் எஸ்.சி. பிரிவினருக்கு 15%, எஸ்.டி. பிரிவினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வெளியாகியிருக்கும் ஆண்டறிக்கையில் கண்டுள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, எஸ்.சி-எஸ்.டி பிரிவினருக்கு உறுதியளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு உயர்கல்வித் துறையில் பெருமளவில் புறக்கணிக்கப்படுவதை அறிய முடிகிறது. இது அம்மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.

அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்- கொரோனாவால் மரணித்த சகோதரிக்கு  திருமாவளவன் உருக்கமான இரங்கல் | Thol Thirumavalavan condoles statement on  sister Banumathi death ...

அதுபோலவே மக்கள்தொகையில் 14.2% இருக்கும் முஸ்லிம்கள் உயர் கல்வித் துறை ஆசிரியர் பணிகளில் தமது மக்கள்தொகை விகிதத்தில் பாதி அளவு கூட பிரதிநிதித்துவத்தைப் பெற முடியவில்லை என்பது தெரிகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு எஸ்.சி-எஸ்.டி மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் உரிமைகளை வழங்குவதில் அக்கறையற்ற அரசாக இருக்கிறது என்பதற்கு இந்த ஆண்டறிக்கை ஒரு சான்றாகும்.

இந்த அநீதிகளைக் களைந்து எஸ்.சி., எஸ்.டி. மற்றும் முஸ்லிம்களுக்கு உரிய எண்ணிக்கையில் உயர்கல்வித் துறையில் பணி நியமனம் வழங்குவதற்கு சிறப்பு பணியமர்த்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

"உயர் கல்வித் துறையில் எஸ்சி/எஸ்டி, முஸ்லீம்களுக்கு மாபெரும் அநீதி" - கொதித்தெழுந்த திருமாவளவன்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; அதிர்ச்சி தரும் சுகாதாரத்துறை ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 535 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கட்டுக்குள்...

சிக்கினார் அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர்… சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!

போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது 55% அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்...

தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகையின் கார்விபத்து சம்பவம்#YashikaAnand

நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியதில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் வந்த தோழி வள்ளிசெட்டி பவணி சம்பவ இடத்திலேயே...

தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்: பிணவறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் என்ஜினியர்கள்!

நாடெங்கிலும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு பலர் தங்களது வேலையை இழந்து உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கிடைத்த வேலைக்கு...
- Advertisment -
TopTamilNews