“அப்பட்டமா நடிக்காதீங்க” – அண்ணாமலை உண்ணாவிரதத்தை கலாய்த்த திருமாவளவன்!

 

“அப்பட்டமா நடிக்காதீங்க” – அண்ணாமலை உண்ணாவிரதத்தை கலாய்த்த திருமாவளவன்!

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மேகதாது அணைக்கு எதிராக ஓரணியில் இருக்கின்றனர். அனைவருடைய குரலும் ஒன்றாக ஒலிக்கிறது. ஆனால் தமிழக பாஜகவின் நிலை தான் பரிதாபத்தில் இருக்கிறது. ஏனெனில் கர்நாடகாவில் ஆள்வது பாஜக. இந்த விவகாரத்தில் தமிழக பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என அரசியல் ரீதியான அழுத்தம் உண்டானது. சொல்லப் போனால் அரசியலில் தனிமைப்படுத்தப்பட்டது. இதையடுத்து புதிதாக தலைவர் பொறுப்பேற்ற அண்ணாமலை, தமிழக பாஜக மேகதாது அணைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் என்று அறிவித்தார்.

“அப்பட்டமா நடிக்காதீங்க” – அண்ணாமலை உண்ணாவிரதத்தை கலாய்த்த திருமாவளவன்!

அதன்படி மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் தஞ்சாவூரில் இன்று காலை தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்குத் தடைவிதித்தும் தடையை மீறி காலையிலேயே மாட்டு வண்டியில் களமிறங்கி போராட்டத்தைத் தொடங்கினார் அண்ணாமலை. போராட்டத்தில் பாஜக மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், ஜி.கே.நாகராஜ், கருப்பு முருகானந்தம், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“அப்பட்டமா நடிக்காதீங்க” – அண்ணாமலை உண்ணாவிரதத்தை கலாய்த்த திருமாவளவன்!

இச்சூழலில் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “பாஜக நாடக அரசியலை நடத்துகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பதற்கு பதிலாக அக்கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சரிடம் வலியுறுத்தலாம். வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் அதற்கென தனி பட்ஜெட் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வாய்ப்பு உள்ளது’’ என்றார்.