“ஆர்.என்.ரவி மீது எங்களுக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது”

 

“ஆர்.என்.ரவி மீது எங்களுக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது”

தமிழ்நாடு அரசியலில் சமீபத்திய ஹாட் டாபிக் ஆர்.என்.ரவி தான். ஆர்.என்.ரவி ஏன் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார்? அவரது பின்னணி என்ன? அரசுடன் இணக்கமாக செல்வாரா அல்லது சிக்கலை உண்டாக்குவாரா போன்ற கேள்விகள் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்களின் மனங்களிலும் ஓடிக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாடு அரசை எதிர்க்க இவரை நியமித்து சதித்திட்டம் தீட்டப்படுகிறதா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர்.

“ஆர்.என்.ரவி மீது எங்களுக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது”

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளிப்படையாகவே போட்டு உடைத்துவிட்டார். சுருக்கமாக சொன்னால் பூனைக்கு மணியைக் கட்டிவிட்டுள்ளார். ரவியின் நியமனம் குறித்து சந்தேகிக்கும் அவர், “ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை ஆளுநராக மோடி அரசு நியமித்திருக்கிறதோ என்று நான் சந்தேகப்படுகிறேன். ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்து ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், அதனை எதிர்த்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய சூழல் உருவாகும்” என்றார்.

K.S. Alagiri backs Tamil Nadu Finance Minister's views on GST Council  voting model - The Hindu

ஆர்.என்.ரவியின் நியமனத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க பாஜகவோ எதோ நடக்காதது நடந்ததாக துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் ரவியை வாபஸ் வாங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அவர் “புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான காங்கிரஸின் சந்தேகத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. நாகலாந்தில் அவர் என்ன செயல்திட்டங்களைச் செய்தார் என விவாதிக்கப்பட்டு வருகிறது.

“ஆர்.என்.ரவி மீது எங்களுக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது”

குறிப்பாக மொழி உணர்வு, தேசிய உணர்வு முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்பட கூடியவர் என்ற முத்திரை அவர் மீது உள்ளது. காங்கிரஸ் சந்தேகப்படுவது போல் தான் நாங்களும் அவரது நியமனத்தைச் சந்தேகிக்கிறோம். ஆகவே மத்திய அரசு ஆர்.என்.ரவி நியமனத்தைத் திரும்பப்பெற வேண்டும். ஜனநாயக முறையில் செயல்படும் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்” என்றார்.