‘திமுக கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கிறது’ – திருமாவளவன் குற்றச்சாட்டு!

 

‘திமுக கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கிறது’ – திருமாவளவன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. ஆளும் அரசான அதிமுக, பாஜகவுடன் தனது கூட்டணியை உறுதிப்படுத்திவிட்டது. ஆனால், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் தேமுதிகவோ இன்னும் மௌனம் சாதிக்கிறது.

‘திமுக கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கிறது’ – திருமாவளவன் குற்றச்சாட்டு!

இதே போல, திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில், திமுக கூட்டணியை உடைக்க பிற கட்சிகள் முயற்சிப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுகிறது. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் இதனை கூறியிருந்தார். இதன் பின்புலத்தில், பாஜக காய் நகர்த்துவதாக தெரிகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணியை சிதைக்க பல சக்திகள் முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களின் முயற்சி ஒரு போதும் பலிக்காது என்று தெரிவித்த அவர், சசிகலா வருகையால் அதிமுக, அமமுகவில் மட்டுமே சலசலப்பு ஏற்படும்; அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.