‘அந்த தொகுதி’ பேரைக் கேட்டவுடன் ஜகா வாங்கிய திருமாவளவன்!

 

‘அந்த தொகுதி’ பேரைக் கேட்டவுடன் ஜகா வாங்கிய திருமாவளவன்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில வாரங்களில் நடக்கவிருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு நகர்வுகளும் உற்று நோக்கப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பிரித்து வழங்குதல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அவ்வப்போது கசிந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது உடுமலைப்பேட்டை தொகுதி பேரைக் கேட்டவுடன் விசிக தலைவர் திருமாவளவன் பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகின்றன.

‘அந்த தொகுதி’ பேரைக் கேட்டவுடன் ஜகா வாங்கிய திருமாவளவன்!

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விசிகவுக்கு, 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்ட விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே கொடுக்க திமுக முன்வந்தது. அதையேற்றுக் கொண்ட திருமா, தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். திமுக தலைமையும் அதை ஏற்றுக் கொண்டது.

‘அந்த தொகுதி’ பேரைக் கேட்டவுடன் ஜகா வாங்கிய திருமாவளவன்!

திருமாவளவனிடம் தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்திய போது, உடுமலைப்பேட்டை தொகுதியை ஒதுக்குவது குறித்து பேசப்பட்டதாம். அப்போது அந்த தொகுதிக்கு பதிலாக சோழவந்தான் தொகுதியை திருமாவளவன் கேட்டதாக தெரிகிறது. காரணம், உடுமலைப்பேட்டையில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் மாறி மாறி ஜெயித்துள்ளன.

சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் கூட அங்கு வெற்றி பெற்றிருக்கிறார்களாம். அதனால் தான் திருமா அந்த தொகுதியை வேண்டாமென்று சொன்னாராம். இருப்பினும், அந்த தொகுதியை விசிகவுக்கே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.