பெகாசஸ் விவகாரம்: ஒட்டுக்கேட்ட மோடி பதவி விலக வேண்டும்- திருமாவளவன்

 

பெகாசஸ் விவகாரம்: ஒட்டுக்கேட்ட மோடி பதவி விலக வேண்டும்- திருமாவளவன்

பெகாசஸ் விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று மோடி அரசு பதவி விலக வேண்டும் என எம்பி திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பெகாசஸ் விவகாரம்: ஒட்டுக்கேட்ட மோடி பதவி விலக வேண்டும்- திருமாவளவன்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “கடந்த ஒரு வார காலமாக நாடாளுமன்றம் இரு அவைகளுமே இயங்கவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் உணர்வுகளை பொருட்படுத்தாமல், அவையை தொடர்ந்து நடத்துவதிலேயே மோடி அரசு கவனம் செலுத்துகிறது. வேவு பார்ப்பது, தங்களுக்கு எதிராக செயல்படுவோரை பழிவாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது. எனவே எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து குரல் எழுப்பி வருகின்றன. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மோடி அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை வி.சி.க. சார்பாக நேரில் சந்தித்து ஐஓபி தனியாருக்கு விற்கக் கூடாது என்கிற மனுவை வழங்கினோம். பொதுத் துறைகளை பயன்படுத்தக்கூடாது தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்று வலியுறுத்தி இருக்கிறோம். அதுபற்றி நான் இன்னும் கொள்கை ரீதியான எந்த முடிவையும் எந்த வங்கி எந்த பொதுத்துறை என்று நிர்ணயிக்கவில்லை, முடிவு செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அதேபோல மீனவர் தொடர்பான மசோதா ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு மோடி அரசு முயற்சிக்கிறது. அது மீனவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்கிற அச்சம் நிலவுகிறது. இது குறித்த மனு ஒன்றையும் மீன்வளத்துறை அமைச்சரிடம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக வழங்கியிருக்கிறோம். பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு குறிப்பிட்ட அமைச்சரின் மீது மட்டும் கால்ப்புணர்ச்சி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல.அதுகுறித்து முறைப்படி சட்டப்படி விசாரணை நடந்துகொண்டிருக்கிறது” எனக் கூறினார்.