திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர்- திருமாவளவன் எம்.பி

திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர்- திருமாவளவன் எம்.பி

இன்று காலை சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தனித்தே போட்டியிடும், தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என தெரிவித்தார். இதற்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர்- திருமாவளவன் எம்.பி

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், “புவனகிரியில் தலித் ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைத்த விவகாரத்தில் சம்பத்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அந்த பகுதியில் தொடர்ந்து இது போன்று நிகழ்வுகள் நடைபெறுகிறது. அரசு இதனை ஆய்வு செய்ய வேண்டும். ஊராட்சி செயலாளர் பதிவியில் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தலித் ஊராட்சி மன்ற தலைவர் சுதந்திரமாக செயல்படுவது குறித்து விசாரணை ஆணையம் அமைத்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர்” என தெரிவித்தார்.