பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? திருமாவளவன் பளீர்

 

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? திருமாவளவன் பளீர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடுபோன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பாமகவுடனான கூட்டணியை உறுதி செய்த நிலையில் தேமுதிக, பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவருகிறது. அதேபோல் திமுக இஸ்லாமிய கட்சிகளுடனும், காங்கிரஸ் உடனும் பேச்சுவார்த்தையை முடித்த நிலையில் இன்று மதிமுக , விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? திருமாவளவன் பளீர்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திராவிட முன்னேற்ற கழகத்துடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது. டி. ஆர். பாலு தலைமையிலான குழுவுடன் தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். விசிகவின் விருப்பத்தை வெளிப்படுத்தினோம். அவர்களின் நிலைப்பாட்டை அவர்களும் கூறினார்கள். எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம், என்னென்ன தொகுதிகள் என்பது உறுதிபடுத்தப்பட்ட பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். பேச்சுவார்த்தைக்கு பின் எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என தெரிவிப்போம்” எனக் கூறினார்.