20% இட ஒதுக்கீடு என்பது பாமக வின் தேர்தல் அரசியல் நாடகம்- திருமாவளவன்

 

20% இட ஒதுக்கீடு என்பது பாமக வின் தேர்தல் அரசியல் நாடகம்- திருமாவளவன்

அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி இந்த சட்டமன்ற தேர்தலும் தொடர்கிறது என்று பல இடங்களில் கூறியிருந்தார். அதனால் பாமகவும் இந்த கூட்டணியில் நீடிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதை உறுதியாக பாட்டாளி மக்கள் கட்சி எங்குமே வெளிப்படுத்தவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என ராமதாஸ் தெரிவித்துவருகிறார்.

20% இட ஒதுக்கீடு என்பது பாமக வின் தேர்தல் அரசியல் நாடகம்- திருமாவளவன்

இந்நிலையில் சிந்தாரிப்பேட்டை மே தினப்பூங்காவில் குத்துச்சண்டை போட்டியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “நாளை பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று எதிர்கட்சிகள் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். மோடி அரசின் பொம்மலாட்ட அரசாக தமிழக அரசு இருப்பது வேதனை அளிக்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிந்த பின்னும், 7 பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் அறிவிக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் மாநில அரசின் உரிமையை கொண்டு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது.

20% இட ஒதுக்கீடு என்பது பாமக வின் தேர்தல் அரசியல் நாடகம். ஜெயலலிதா காரில் சசிகலா வருகை, டிடிவி தினகரன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேர்க்கப்படுவார் என்ற கேபி முனுசாமியின் பேச்சு எல்லாம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதுகுறித்து கருத்துக்கூற விரும்பவில்லை” எனக் கூறினார்.