மோடி அரசின் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையை விசிக கண்டிக்கிறது- திருமா

 

மோடி அரசின் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையை விசிக கண்டிக்கிறது- திருமா

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர், “வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்தும் இத்தனை நாள் போராட்டம் என்பது ஒரு யுக புரட்சி. உலகமே இந்த போராட்டத்தைக் உற்று நோக்கி கொண்டு இருக்கிறது. இந்த அறப்போராட்டத்தை சீர்குலைப்பதற்காக சமூக விரோத சக்திகளை ஏவி விட்டு, வன்முறைக்கு வித்திட்டு, அரச பயங்கரவாத ஒடுக்கு முறையை மத்தியில் ஆளும் மோடி அரசும், அமித்ஷா தலைமையிலான காவல்துறையும் திணித்திருக்கிறது. மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விசிக வன்மையாக கண்டிக்கிறது. இனியும் பிடிவாதம் பிடிக்காமல் மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

மோடி அரசின் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையை விசிக கண்டிக்கிறது- திருமா

விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்க ஆட்சியாளர்களே வித்திட்டு இருக்கிறார்கள். எனவே இந்த வன்முறைக்கு ,கண்ணீர் புகைகுண்டு வீச்சுக்கு மோடி அரசே முழுபொருப்பேற்க வேண்டும். ஆட்சியாளர்களின் அணிதியான போக்கு தெரிய கூடாது என்பதற்காவே இணையதள சேவை டெல்லியில் முடக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் மட்டுமல்ல ஏழு பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்” எனக் கூறினார்.

விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர்ப் புகை
குண்டுகள் வீச்சு. மோடி அரசின் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையை
விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் எனக்குறிப்பிட்டு திருமா, அவரது ட்விட்டரில் ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.