தமிழகத்தை வன்முறை களமாக மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருகிறது: திருமாவளவன்

 

தமிழகத்தை வன்முறை களமாக மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருகிறது: திருமாவளவன்

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு செய்ய முடியாது என உச்சநீதிமன்ற உத்தரவிட்டதற்கு மோடி அரசு தான் காரணம். மோடியின் சமூக விரோத போக்கை விடுதலை சிறுத்தைகள் கண்டிக்கிறது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மசோதா கிடப்பில் உள்ளது இதற்கும் பாஜக தான் காரணம். மத்திய அரசை கண்டித்து நாளை மறு நாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தமிழகத்தை வன்முறை களமாக மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. தலைவர்கள் உள்ளிட்ட பாஜகவினர் தனி நபர் விமர்சனம் செய்கின்றார்கள். ஸ்டாலின் வெளியில் தலை காட்ட முடியாது என்று பாஜகவினர் வன்முறையை தூண்டுகின்றார்கள். இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கின்றது.

தமிழகத்தை வன்முறை களமாக மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருகிறது: திருமாவளவன்

பெண்களை இழிவுப்படுத்தி பாஜகவினர் வெளிப்படையாகவே விமர்சனம் செய்துள்ளனர். அவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜகவினர் தனக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்து வருபவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தன்னை பற்றி அவதூறும் பரப்புவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனக் கூறினார்.