உள்ளாட்சி தேர்தலில் விசிக தனி சின்னத்தில் போட்டியிடும்- திருமாவளவன்

 

உள்ளாட்சி தேர்தலில் விசிக தனி சின்னத்தில் போட்டியிடும்- திருமாவளவன்

நீட் தேர்வு எழுதி, தோல்வி அடைந்துவிடுமோ என்ற அச்சத்தால் கடந்த 15-ஆம் தேதி காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டுக்கு சென்ற விசிக தலைவர் திருமாவளவன், செளந்தர்யா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

உள்ளாட்சி தேர்தலில் விசிக தனி சின்னத்தில் போட்டியிடும்- திருமாவளவன்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழப்பதற்கு ஒன்றிய அரசே காரணம். தமிழக அரசு நீட் எதிராக மசோதா நிறைவேற்றி அதை ஆளுனருக்கும் அனுப்பியுள்ளது. இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றிய மசோதா நிச்சயம் பலன் தரும். இதற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். திமுகவுக்கு எதிராக கருத்து சொல்கிறேன் எனக்கூறி எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை ஆதரிக்க கூடாது. தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக பேசக்கூடாது. விரைவில் நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவம் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் முதல்வரும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் விசிக தனி சின்னத்தில் போட்டியிடும். இதற்கான பேச்சுவார்த்தை 90% முடிந்துள்ளது. கேட்ட இடங்கள் கிடைக்காவிட்டாலும் ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றியை தேடி தருவோம். இந்த உள்ளாட்சி தேர்தலில் விடுதலைகட்சி, ஒன்றாய கவுன்சிலர் பதவிக்கு தென்னை மர சின்னத்திலும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வாட்ச் சின்னத்திலும் போட்டியிடும்” என தெரிவித்தார்.