வலுவான தலைமையில்லாமல் அதிமுக தள்ளாடிக் கொண்டிருக்கிறது- திருமாவளவன்

 

வலுவான தலைமையில்லாமல் அதிமுக தள்ளாடிக் கொண்டிருக்கிறது- திருமாவளவன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “வலுவான தலைமையில்லாமல் அதிமுக தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பாஜகவுடன் இணைந்துள்ளதால் அதிமுக கடுமையான சிக்கல்களை கையாள உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதைக் கூட அதிமுக அரசால் முடிவு செய்ய முடியவில்லை. எதிர்க்கட்சி தலைவரைக் கூட பாஜக அரசுதான் தீர்மானிக்கிறது. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாஜக வலுவாக இருக்கும் 4 இடங்களில் வெற்றி பெற்றதை பெருமையாக நினைக்கிறார்கள் என்றால் அவர்களின் தரம் என்ன என்பது தெரிகிறது.

வலுவான தலைமையில்லாமல் அதிமுக தள்ளாடிக் கொண்டிருக்கிறது- திருமாவளவன்

கொரோனா காலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை விடுவிக்கலாம் என உச்சநீதிமன்ற வழி கொடுத்துள்ளது. அதனை பின்பற்றி 7 தமிழர்கள் உட்பட அனைவரும் பரோலில் விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். முதலமைச்சர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தும் பாராட்டுக்குறியது. ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்” எனக் கூறினார்.