விசிக வேட்பாளர்கள் உத்தேசபட்டியல் என பரவும் தகவல் உண்மை அல்ல- திருமாவளவன்

 

விசிக வேட்பாளர்கள் உத்தேசபட்டியல் என பரவும் தகவல் உண்மை அல்ல- திருமாவளவன்

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து கையெழுத்தானது. சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் விசிக போட்டியிடவுள்ளது. இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விரும்பும் பட்டியல் என சில தொகுதிகளின் பட்டியல் வெளியானது. அந்தவகையில், வேளச்சேரி ,கள்ளக்குறிச்சி , காட்டுமன்னார்கோயில் ,உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட விருப்பம் என தகவல் வெளியானது. அதேபோல் திட்டக்குடி, சோழிங்கநல்லூர் ,புவனகிரி ,குன்னம், மயிலம் ஆகிய தொகுதிகளின் பட்டியலையும் திமுகவிடம் விசிக கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

விசிக வேட்பாளர்கள் உத்தேசபட்டியல் என பரவும் தகவல் உண்மை அல்ல- திருமாவளவன்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “விசிக வேட்பாளர்கள் உத்தேசபட்டியல் என பரவும் தகவல் உண்மை அல்ல. இயக்கத் தோழர்கள் இதனைப் பொருட்படுத்த வேண்டாம். தொகுதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்த பின்னர் தேர்வுக் குழு வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும். அதன்பிறகே அறிவிக்கப்படும்” எனக் கூறினார்.