அதிமுக அமைச்சர் அன்பழகனை பாராட்டிய திருமாவளவன் : காரணம் தெரியுமா?

 

அதிமுக அமைச்சர் அன்பழகனை பாராட்டிய திருமாவளவன் : காரணம்  தெரியுமா?

அண்ணா பல்கலைக்கழகத்தைத் தரம் உயர்த்த தேவையில்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்திருப்பதை வரவேற்பதாக எம்.பி தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைச்சர் அன்பழகனை பாராட்டிய திருமாவளவன் : காரணம்  தெரியுமா?

இதுகுறித்து எம்.பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணா பல்கலைக்கழகத்தைத் தரம் உயர்த்த தேவையில்லை என்றும் துணைவேந்தரின் நடவடிக்கைகளை அரசு வேடிக்கைப் பார்க்காது என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இந்த நிலைப்பாட்டில் அரசு நிலையாக – உறுதியாக இருத்தல் வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும். உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் மூன்று ஆண்டுகால பணிக்காலத்தில் துணைவேந்தர் சுதந்திரமாக செயல்படலாம்; அதற்கு தடையில்லை. துணைவேந்தர் என்பவர் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் காட்டமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.