“பெரியாரின் கனவு நிறைவேறியது” – முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய திருமாவளவன்!

 

“பெரியாரின் கனவு நிறைவேறியது” – முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய திருமாவளவன்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு என்று சொல்வதைக் காட்டிலும் அது தந்தை பெரியார் போட்ட விதை என்றே சொல்ல வேண்டும். வித நான் போட்டது என சிவாஜி சொல்வதைப் போல அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். பெரியாரின் போராட்டத்தை அடுத்து முதலமைச்சராக இருந்த கருணாநிதி சட்டமாக இயற்றப்படும் என வாக்குறுதி கொடுத்ததன் காரணமாக போராட்டத்தை அவர் கைவிட்டார். பெரியாருக்கு வாக்கு கொடுத்தது போல கருணாநிதி சட்டமியற்றினார்.

“பெரியாரின் கனவு நிறைவேறியது” – முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய திருமாவளவன்!

இதனால் புண்பட்ட சிலர் உச்ச நீதிமன்றம் வரை சென்று தடை வாங்கினர். இதைத் தான் பெரியார் தன் நெஞ்சில் தைத்த முள் என்றார். ஆனால் அதிலும் சட்டப்போராட்டம் நடத்தி திமுக அரசு வென்றெடுத்தது. அதற்குப் பின் அதிமுக ஆட்சி வந்துவிட்டதால் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் திமுக அரசு அமைந்திருப்பதால் இந்துசமய அறநிலையத் துறையில் அதிரடி நடவடிக்கைகளை அமைச்சர் சேகர்பாபு எடுத்துவருகிறார். இன்றோடு ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்த கையோடு, அனைத்து சாதியினர் அர்ச்சராகும் திட்டத்தை அமல்படுத்தி பெரியார், கருணாநிதியின் கனவை நிறைவேற்றியிருக்கிறார்.

“பெரியாரின் கனவு நிறைவேறியது” – முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய திருமாவளவன்!

ஸ்டாலினின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்திருக்கிறது. வழக்கம்போல புண்படுத்திட்டான் புண்படுத்திட்டான் என்று ஒருசாரார் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் சமூகநீதியை முன்னெடுக்கும் தலைவர்கள், கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அந்த வகையில் நீண்ட காலமாக சமூக அநீதிகளுக்கு குரல் கொடுத்துவரும் விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், “வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியதொன்று. அனைத்து தரப்பு மக்களும் அர்ச்சகராக வேண்டும் எனும் பெரியாரின் எண்ணத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியிருப்பது பாராட்டும்படியான செயல்” என்றார்.