விசிகவுக்கு மீண்டும் பானை… டிஆர் ஸ்டைலில் திருமாவளவன் போட்ட ‘பானை’ ட்வீட்!

 

விசிகவுக்கு மீண்டும் பானை… டிஆர் ஸ்டைலில் திருமாவளவன் போட்ட ‘பானை’ ட்வீட்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. விசிகவுக்கு வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. திருப்போரூர் தொகுதியில் பாமகவை எதிர்த்தும் மற்ற தொகுதிகளில் அதிமுகவை எதிர்த்தும் விசிக களம் காணுகிறது.

விசிகவுக்கு மீண்டும் பானை… டிஆர் ஸ்டைலில் திருமாவளவன் போட்ட ‘பானை’ ட்வீட்!

திமுக கூட்டணியில் விசிக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என திருமாவளவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாமல் இழுபறியாகவே இருந்தது. இந்நிலையில் இன்று விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவனுக்கு பானை சின்னம் ஏற்கெனவே ஒதுக்கப்படிருந்தது கவனிக்கத்தக்கது. வெற்றிச் சின்னமான பானை சின்னம் மீண்டும் கிடைத்துள்ளதால் திருமாவளவன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ள அவர், “தமிழகத்தில் ஆறு தொகுதிகளுக்கும் பானை சின்னம். புதுவையில் போட்டியிடும் ஒரு தொகுதிக்கும் பானை சின்னம். நாகரிக வளர்ச்சிக்கான சின்னம் பானை. உழைப்பின் வலிமைக்கான சின்னம் பானை. அறிவின் வெற்றிக்கான சின்னம் பானை. அறிவு+உழைப்பு+நாகரிகம்= விடுதலைச் சிறுத்தைகள் விசிக சின்னம் பானை. தமிழர்களின் பெருவலிமை பானை.தமிழர்களின் அறிவாளுமை பானை. தமிழர்களின் பேரதிகாரம் பானை” என்று டிஆர் ஸ்டைலில் குறிப்பிட்டுள்ளார்.