10 கேட்டால் 4 தொகுதியை கொடுக்கின்றனர்- திருமாவளவன் அதிருப்தி

 

10 கேட்டால் 4 தொகுதியை கொடுக்கின்றனர்- திருமாவளவன் அதிருப்தி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடுபோன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பாமகவுடனான கூட்டணியை உறுதி செய்த நிலையில் தேமுதிக, பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவருகிறது. அதேபோல் திமுக இஸ்லாமிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்த நிலையில் இன்று மதிமுக , விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டாம் நாளாக பேச்சுவார்த்தை நடத்தியது. மதிமுக மற்றும் விசிகவுக்கு எதிர்பார்த்த தொகுதிகளை திமுக வழங்கவுக்கௌ அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

10 கேட்டால் 4 தொகுதியை கொடுக்கின்றனர்- திருமாவளவன் அதிருப்தி

10 தொகுதிகள் கேட்ட நிலையில், 4 சீட்கள் மட்டுமே கொடுக்க முடியும் என திமுக கூறியுள்ளதால், விசிக தலைவர் திருமாவளவன் அதிருப்தியடைந்துள்ளார். இரட்டை இலக்கத்தில் கேட்டால் ஒற்றை இலக்கத்தில் தொகுதியை ஒதுக்கி ஏமாற்றிவிட்டதாக விசிகவினர் புலம்பிவருகின்றனர் இதனால் திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே இழுபறி நிலை நீடித்து வருகிறது.