ஊழல் மிகுந்த அதிமுக ஆட்சி தான் இதற்கு காரணம் – திருமாவளவன் காட்டம்!

 

ஊழல் மிகுந்த அதிமுக ஆட்சி தான் இதற்கு காரணம் – திருமாவளவன் காட்டம்!

தமிழகத்தின் கடன்சுமை அதிகரிப்பதற்கு ஊழல் மிகுந்த திமுக ஆட்சி தான் காரணம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முதன்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக தமிழக அரசின் நிதிநிலையை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக வெள்ளை அறிக்கை வெளியிட திமுக அரசு திட்டமிட்டது. அதன்படி இன்று காலை கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலை விவரங்களை 120 பக்க வெள்ளை அறிக்கையாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அதில், அதிமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருந்தது.

ஊழல் மிகுந்த அதிமுக ஆட்சி தான் இதற்கு காரணம் – திருமாவளவன் காட்டம்!

திறமையற்ற அதிமுக அரசால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வேறு இடங்களுக்கு சென்று விட்டது. திமுக ஆட்சியில் 11 சதவீதமாக இருந்த வருவாய் அதிமுக ஆட்சியில் 4 சதவீதமாக குறைந்துவிட்டது. ஒன்றிய அரசிடமிருந்து வரும் நிதி 33 சதவீதமாக குறைந்துவிட்டது. தமிழகத்தின் மீது இருக்கும் கடனை தனிநபருக்கு பிரித்து தந்தால் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.60 லட்சம் ரூபாய் கடன் சுமை இருக்கும். அந்த கடன்களுக்காக நாளொன்றுக்கு தமிழக அரசு ரூ.87 கோடி ரூபாய் வட்டி செலுத்தி வருகிறது என்பன உள்ளிட்ட பல அதிர்ச்சி தரும் தகவல்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சரியாக கையாளப்படவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஊழல் மிகுந்த அதிமுக ஆட்சியால் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கடன் அதிகம் இருப்பது கவலைக்குரியது என்று கூறியுள்ளார். மேலும், தேர்தல் காலத்தில் தந்த அறிவிப்புகளை திமுக அரசு தள்ளிப்போடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.