“வன்னியர்களுக்காக சண்ட போட்டேன்… சிறுத்தைங்க தான் கூட நிக்குறாங்க” – கண்ணீர் விட்ட வேல்முருகன்… உருகிய திருமா!

“வன்னியர்களுக்காக சண்ட போட்டேன்… சிறுத்தைங்க தான் கூட நிக்குறாங்க” – கண்ணீர் விட்ட வேல்முருகன்… உருகிய திருமா!

தமிழ்நாட்டின் வடக்கு மண்டலம் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அரசியல் களத்தைப் பொறுத்தவரை அது வன்னியர் பெல்ட் என்று வருணிக்கப்படுகிறது. இங்கு அதிமுக, திமுக மாபெரும் கட்சிகளைத் தாண்டி ராமதாஸுன் பாமக ஆதிக்கம் செலுத்துகிறது. இதுஒருபுறம் இருந்தாலும் தலித் மக்களின் பெருவாரியான வாக்குகளும் வடக்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே இம்மண்டலம் விசிக vs பாமக என்ற போட்டி நிலவுகிறது. இப்போது இல்லை பல தசாப்தங்களாக இப்போட்டி அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

“வன்னியர்களுக்காக சண்ட போட்டேன்… சிறுத்தைங்க தான் கூட நிக்குறாங்க” – கண்ணீர் விட்ட வேல்முருகன்… உருகிய திருமா!

அந்தப் போட்டியில் ராமதாஸுக்கு படை தளபதியாக நின்று திருமாவளவனை எதிர்த்தவர் தான் வேல்முருகன். 30 ஆண்டுக்கும் மேலாக பாமகவில் உழைத்தவர், ராமதாஸுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக வெளியேறினார். தற்போது தமிழர்களின் நலனைப் பேசும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை நடத்திவருகிறார். டோல்கெட் வேல்முருகன் என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகம் வரலாம். இவருக்கு வன்னியர்கள் மட்டுமல்லாமல் தலித் மக்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. தற்போது பிரச்சாரத்துக்குச் செல்லும் வேல்முருகனை தலித் மக்கள் மலர் தூவி வரவேற்பதே அதற்கு சாட்சி.

“வன்னியர்களுக்காக சண்ட போட்டேன்… சிறுத்தைங்க தான் கூட நிக்குறாங்க” – கண்ணீர் விட்ட வேல்முருகன்… உருகிய திருமா!

இப்போது திமுக கூட்டணியில் வேல்முருகன் இருக்கிறார். அவரின் முன்னாள் எதிர் துருவமான திருமாவளவனும் இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி வன்னியர்-தலித் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க முடிவெடுத்துள்ளனர். வெறும் வாக்குகளுக்காக மட்டுமல்லாமல் நாளைய தலைமுறையின் நிம்மதியான வாழ்க்கைக்கு இந்த இணையின் ஒற்றுமை ரொம்பவே முக்கியம் என்று சொன்னால் அது மிகையாகாது. முதல் படியாக பண்ருட்டியில் போட்டியிடும் வேல்முருகனுக்கு ஆதரவாக திருமாவளவன் களமிறங்கியிருக்கிறார்.

“வன்னியர்களுக்காக சண்ட போட்டேன்… சிறுத்தைங்க தான் கூட நிக்குறாங்க” – கண்ணீர் விட்ட வேல்முருகன்… உருகிய திருமா!

நேற்றைய பிரச்சாரக் கூட்டத்தில் இருவரும் ஒரே மேடையில் இணைந்து பேசினர். அப்போது வேல்முருகன் பேசுகையில், “பாமகவில் நம்பர் 2 ஆக இருந்தேன். 30 வருடம் பாமகவுக்காக உழைத்தேன். ஆனால் அதை எல்லாம் நினைத்து பார்க்காமல் பாமகவே என்னை இப்போது அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் நான் எதிரியாகப் பார்த்த சிறுத்தைகள் தான் இப்போது எனக்குது துணையாக இருக்கிறார்கள். என்னை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

“வன்னியர்களுக்காக சண்ட போட்டேன்… சிறுத்தைங்க தான் கூட நிக்குறாங்க” – கண்ணீர் விட்ட வேல்முருகன்… உருகிய திருமா!

வன்னியர்களே சிந்தியுங்கள். சாதி கடந்து நாம் இணைய வேண்டும். உங்களுக்காக சண்டை போட்டு, கோர்ட், கேஸ் என்று அலைந்தேன். யாருக்கு எதிராக சண்டை போட்டேனோ அவர்கள்தான் எனக்காக இப்போது தேர்தல் வேலைகளைப் பார்க்கிறார்கள். 30 வருஷமாக ஜாதி சண்டை போட்டோம். இனிமேல் ஜாதி சண்டை வேண்டாம். எல்லோரும் படிப்போம். முன்னேறுவோம். வேலைக்கு போவோம்.

சண்டையை மறப்போம். பிரச்சனை வந்தால் பேசி தீர்ப்போம், வன்னியர்களும் , தலித் மக்களும் ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம்” என்று பேசிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் விட்டார். வேல்முருகனின் தொடர்ச்சியான சாதி எதிர்ப்பு பேச்சு வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தச் சமூகத்திற்கு நிச்சயமாக பல வேல்முருகன்கள் தேவை தான். இனி எல்லா நாளும் கார்த்திகை தான்!