“பெண்ணுரிமை போராளி திருமா” – டிவிட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன்…!

 

“பெண்ணுரிமை போராளி திருமா” – டிவிட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன்…!

மகளிரை இழிவுசெய்யும் மனு ஸ்மிருதியைத் தடை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்தியில், பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதிக்குடிகளையும்,பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதியை தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக, நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், அவதூறு பரப்புவோர் முகத்திரை கிழிப்போம்! ஆயிரம் தலைமுறை இழிவைத் துடைப்போம்! என பதிவிட்டதுடன் மனு தர்மத்தில் இருந்து சில அத்தியாங்களையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

”ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால் சலன புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால், கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்”.
மனு தர்மம் 9.15 ,

மனு 9.14l, ”பெண்கள் அழகை பற்றி கவலைப்படுவதில்லை,வயதை பற்றியும் அக்கறை கொள்வதில்லை, ஆணாக இருந்தால் போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உறவுகொள்ள தயாராக தயங்கார்” என்றும்,

”கணவன் சூதாடுகிறவனாயினும், பிணியாளனாகியும், மனைவி அவனுக்கு செருக்குற்று, பணி புரியாமல் இருந்தால் அவளுக்கு அழகு செய்தல், படுக்கை, ஆடை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்” மனு ஸ்மிருதி அத்தியாயம் 9.78 ,

புலன்களை அடக்கியவனாயினும், அறிவிலியாயினும் அவர்களை, தங்களது தொடர்பால் காமக்குரோதம் உள்ளவனாக செய்வர் மாதர்”. மனுஸ்மிருதி அத்தியாயம்-2 : 214 என இந்த அத்தியாயங்களைப் பதிவிட்டிருந்தார்.

Image

முன்னதாக, மனு ஸ்மிருதி பெண்களை எப்படியெல்லாம் இழிவு படுத்துகிறது என்பதை கூறும் வகையில், திருமாவளவன் பேசியதில், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடிட் செய்து, இந்து பெண்களை திருமாவளவன் இழிவு படுத்திவிட்டார் என டிவிட்டரில் டிரெண்டிங் செய்தனர். இதையடுத்து, திருமாவளவன் பேசிய முழு வீடியோவையும் வெளிட்டு, பெண்ணுரிமை போராளி திருமா என டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

#பெண்ணுரிமைபோராளிதிருமா

#சனாதனத்தின்நேர்எதிரிDrதிருமா

என்கிற ஹேஸ்டேக்கில், திருமாவளவன் புகைப்படங்கள், பேச்சுகளை வெளியிட்டு டிரெண்டிக் ஆக்கி வருகின்றனர். இந்த நிலையில், நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.