உள்ளாட்சித் தேர்தலிலும் விசிக திமுகவுடன் தான் கூட்டணி – திருமாவளவன் அறிவிப்பு!

 

உள்ளாட்சித் தேர்தலிலும் விசிக திமுகவுடன் தான் கூட்டணி – திருமாவளவன் அறிவிப்பு!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 22ஆம் தேதியோடு வேட்பு மனுத்தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் 23ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலிலும் விசிக திமுகவுடன் தான் கூட்டணி – திருமாவளவன் அறிவிப்பு!

அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை களமிறக்க ஆயத்தமாகி வருகின்றன. மாபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளன. அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது திடீர் திருப்பமாக அமைந்தது. அதே போல, தேமுதிகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணியை தொடருவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் விசிக திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 4 தொகுதிகளில் விசிக வெற்றிக் கண்டது. தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணித் தொடருவதாக அறிவித்துள்ளது. இம்முறை விசிகவுக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பதை பொருந்திருந்து பார்க்கலாம்…