“புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலை செய்த பாஜக” – ஸ்டாலின் தலையிட திருமாவளவன் கோரிக்கை!

“புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலை செய்த பாஜக” –  ஸ்டாலின் தலையிட திருமாவளவன் கோரிக்கை!

புதுச்சேரி யுனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் 16 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையோடு என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கவுள்ளது. மே 7ஆம் தேதி ரங்கசாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். எதிர்க்கட்சியான திமுக 6 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. சுயேச்சைகள் 6 இடங்களில் வென்றனர்.

“புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலை செய்த பாஜக” –  ஸ்டாலின் தலையிட திருமாவளவன் கோரிக்கை!

முதலமைச்சர் பதவியேற்றாலும் அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ இன்னும் பதவியேற்கவில்லை. ஆனால் இதற்கு முன்பே மத்திய அரசு மூன்று நியமன எம்எல்ஏக்களை நியமித்து அரசாணை வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில் கே.வெங்கடேசன், விபி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை நியமித்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் கடிதம் புதுச்சேரி தலைமைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நியமன எம்எல்ஏக்கள் குறித்து அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

“புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலை செய்த பாஜக” –  ஸ்டாலின் தலையிட திருமாவளவன் கோரிக்கை!

தற்போது இதை விமர்சித்துப் பேசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக சதி செய்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்கும் முன்பே மூன்று நியமன உறுப்பினர்களை பாஜக அரசு நியமித்திருப்பது ஜனநாயகப் படுகொலை. திமுக உடனடியாக தலையிட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.