பிறந்தநாளுக்காக ஸ்டைலாக மாறிய திருமா! வைரலாகும் போட்டோ ஷூட்

 

பிறந்தநாளுக்காக ஸ்டைலாக மாறிய திருமா! வைரலாகும் போட்டோ ஷூட்

ஆகஸ்ட் 17 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர், போட்டோஷூட் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. கோட், சூட்டுடன் திருமாவளவன் எடுத்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை அள்ளிவருகிறது.

Image

1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிறந்த தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அரசியல்வாதியும் ஆவார். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார்.

Image

தலித் சிறுத்தைகள் அமைப்பை விடுதலைச் சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றிய திருமாவளவன் நீலம் மற்றும் சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அந்த இயக்கத்திற்காக வடிவமைத்து 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் மதுரையில் அக்கொடியை ஏற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்தபோது 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனது பிறந்த நாளிலேயே தொல். திருமாவளவன் தனது அரசுப் பணியைத் துறந்தார்.

Image

இவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியிலிருந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பணியாற்றிவருகிறார்.