‘மோடி அரசின் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறை’ – கண்டிக்கும் திருமாவளவன்!

 

‘மோடி அரசின் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறை’ – கண்டிக்கும் திருமாவளவன்!

டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், டெல்லியில் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்திக் கொண்டிருக்கும் மக்கள் மீது மோடி அரசு. அமித்ஷா தலைமையிலான காவல்துறை காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. தடியடி நடத்துவதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசுகிறார்கள். இதன் மூலம் போராடும் விவசாயிகளை சிதைத்து விட முடியும், கலைத்து விட முடியும் என்று நம்புகிறது. மோடி அரசின் இந்த மக்கள் விரோத போக்கையும் அரச பயங்கர வாத போக்கையும் விசிக மிக வன்மையாக கண்டிக்கிறது என கூறுகிறார்.

‘மோடி அரசின் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறை’ – கண்டிக்கும் திருமாவளவன்!

தொடர்ந்து, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து லட்சக் கணக்கான விவசாயிகள் மிகுந்த அமைதி காத்து கட்டுப்பாடுகள் காத்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தினர். ஆனால், மோடி அரசு அதனை பொருட்படுத்தவில்லை. பிடிவாதத்தை தளர்த்தவில்லை. 10 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. இந்த நிலையில் தான் குடியரசு தின நாளில் நீதி கேட்டு டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்துகின்றனர். இது இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஆனால், இந்த புரட்சியை ஒடுக்க கார்ப்பரேட்களின் எடுபிடியாக செயல்படும் மோடி, அமித்ஷா ஆகியோர் வன்முறை வெறியாட்டத்தை ஏவுவதை விசிக கண்டிக்கிறது என்கிறார்.

மேலும், இந்த போக்கை கைவிட்டு விட்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார்.