• February
    22
    Saturday

Main Area

Main



'சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் தாலி...யாருக்கும் பாதிப்பில்லை'...தாலி பூஜையின் வைரல் வீடியோ!

சிவன்மலை
சிவன்மலை

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் பகுதியில் சிவன்மலை ஆண்டவர் சுப்ரமணிய சாமி கோவில் உள்ளது. இங்குள்ள ஒரு உத்தரவு பெட்டி பெட்டியில் ஏதாவது ஒரு பொருளிருந்தால் அது சம்பந்தமாக நாட்டில் ஒரு நிகழ்வு நடக்கும் என்பது பக்தர்கள் காலம் காலமாக நம்பும் விஷயமாக உள்ளது. இதுகுறித்து கூறும் அவர்கள்,  ஒரு சமயம் அந்த உத்தரவு பெட்டியில் தண்ணீர் இருந்ததாம் அப்போது நாட்டில் சுனாமி வந்ததாம் .ஒரு சமயம் துப்பாக்கி தோட்டா இருந்ததாம் அப்போது கார்கில் போர் நடந்ததாம் .இப்படி பக்தர்கள் கனவில் தோன்றி கடவுள் சொல்லும் பொருளை வைத்து பூஜை செய்தால் இப்படி அது சம்பந்தமாக ஏதாவது நாட்டில் நடக்கும் என்பது ஐதீகம்'  கூறுகிறார்கள் அந்த ஊர் பெரியவர்கள்.

ttn


அந்த வகையில் இந்தாண்டு பெட்டியில் தாலிக்கயிறு வைத்து பூஜை செய்கிறார்கள். இதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்படுமா என்று பக்தர்கள் பதறி போயிருந்த நிலையில் இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 'சிவன்மலை ஆண்டவர் உத்தரவு தான் விரலிமஞ்சளுடன் கூடிய தாலி.  விரைவில் திருமணம் ஆகாத அனைத்து ஆண் பெண் வரன்களுக்கு விரைவில் நடைபெறும். மேலும் திருமாங்கல்யம் ஒரு சுப நிகழ்வாக பார்க்கப்படுவதால்  இனி நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் சுப மங்களமாக நடைபெறும் என்று ஆண்டவன் நமக்கு உத்தரவிட்டுள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்' என்று  தெரிவித்துள்ளனர் . இதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று  பக்தர்கள்  நிம்மதியடைந்துள்ளனர்.
 

ttn

கடந்த 2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு பெட்டியில் மஹாலஷ்மி சிலை வைத்து பூஜை செய்தபோது தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் அதிகமான பேர் வெற்றிபெற்று அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்று கூறப்படுகிறது. 


 

2018 TopTamilNews. All rights reserved.