`எம்.எல்.ஏவுக்கு எதிராக வீடியோ; வாலிபரின் கையை உடைத்த போலீஸ்!’- நீதிபதி ஆய்வால் வெளிச்சத்துக்கு வந்த சித்ரவதை

 

`எம்.எல்.ஏவுக்கு எதிராக வீடியோ; வாலிபரின் கையை உடைத்த போலீஸ்!’- நீதிபதி ஆய்வால் வெளிச்சத்துக்கு வந்த சித்ரவதை

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறாக வீடியோ வெளியிட்ட திருச்செந்தூர் வாலிபரை காவல்துறையினர் சித்ரவதை செய்ததோடு, அவரது கையை முறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`எம்.எல்.ஏவுக்கு எதிராக வீடியோ; வாலிபரின் கையை உடைத்த போலீஸ்!’- நீதிபதி ஆய்வால் வெளிச்சத்துக்கு வந்த சித்ரவதை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கேரளாவில் குரூவாயூரில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரியில் தனது முகநூல் பக்கத்தில், திமுகவை சேர்ந்த திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், குரூவாயூர் சென்ற மணிகண்டனை கடந்த 7ம் தேதி காவல்துறையினர் செய்தனர். மேலும், அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு, பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்ட காவல்துறையினர், அவரது தந்தையிடம் பேச அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், மணிகண்டனின் வலது கையை காவல்துறையினர் அடித்து முறித்ததாக கூறப்படுகிறது. அந்த கைக் கட்டுடன் மணிகண்டன் பேராவூரணி சிறையில் அடைக்கப்பட்டார். சாத்தான்குளம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், காவல்துறையினர் தன்னுடைய கையை முறித்ததாக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

`எம்.எல்.ஏவுக்கு எதிராக வீடியோ; வாலிபரின் கையை உடைத்த போலீஸ்!’- நீதிபதி ஆய்வால் வெளிச்சத்துக்கு வந்த சித்ரவதை

இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலைகளில் காவல்துறையினரால் சித்ரவதைக்கு ஆளான கைதிகள் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்ய மாவட்ட நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்ட நீதிபதி ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் ஆய்வு நடத்தி வருகிறார். இந்த நிலையில், பேராவூரணி சிறைச்சாலையில் ஆய்வு செய்த நீதிபதியிடம், மணிகண்டன் தனக்கு காவல்துறையினரால் நடந்த துயரத்தை கூறியுள்ளார். இதையடுத்து மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்தே மணிகண்டன் சித்ரவதை செய்யப்பட்டது தெரியவந்தது.

காவல்துறையினரால் தனக்கு நடந்த கொடுமை குறித்து மணிகண்டன் கூறுகையில், “திருச்செந்தூர் டிஎஸ்பியிடம் என்னை கடந்த 8ம் தேதி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் உள்ள மாடியில் வைத்து காலையில் இருந்து மதியம் 3 மணி வரை காவல்துறையினர் என்னை சித்ரவதை செய்தனர். லத்தி, பிளாஸ்டிக் பைப்பால் என்னை கடுமையாக தாக்கினர். இதில் எனது வலது கை உடைந்துவிட்டது.

`எம்.எல்.ஏவுக்கு எதிராக வீடியோ; வாலிபரின் கையை உடைத்த போலீஸ்!’- நீதிபதி ஆய்வால் வெளிச்சத்துக்கு வந்த சித்ரவதை

வலியால் துடித்த என்னை, இடது கையில் விலங்கு மாட்டி ஜன்னில் பூட்டி வைத்து இரும்பு கம்பியால் அடித்து சித்ரவதை பண்ணினர். பின்னர் என்னிடம், நீதிபதியிடமோ, மருத்துவர்களிடமோ அடித்தது குறித்து சொல்லக்கூடாது என்று மிரட்டினர். இதையடுத்து, திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முத்துராமன் என்னை மாஜிஸ்திரேட் சரவணனிடத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது, கீழே விழுந்து கை உடைந்துவிட்டதாக பொய் சொன்னேன். பின்னர் பேராவூரணி சிறையில் காவல்துறையினர் என்னை அடைத்தனர். காவல்துறையினருக்கு பயந்து ஜாமீன்கூட கேட்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். இப்போதுதான் மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றுள்ளேன். வழக்குகளை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன். குற்றச்சாட்டுகள் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது” என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.