திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது!

 

திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது!

திருச்செந்தூர் கோவிலில் மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவுகள் இன்றுதொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பீதியால் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகளை அளித்த அரசு, ரூ.10,000க்கும் குறைவான வருமானம் ஈட்டும் கோவில்களை திறக்க அனுமதி அளித்தது. அதன் படி நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் இருந்த சிறிய வழிபாட்டு தலங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி, தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்கலாம், பேருந்து சேவைக்கு அனுமதி, முழு நேரக்கடைகள் என பல அறிவிப்பை முதல்வர் அறிவித்தார்.

திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது!

அதன் படி, கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டதால் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும், ஒரு சில கோவில்களில் ஆன்லைன் முன் பதிவுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன் பதிவுகள் தொடங்கியுள்ளது. www.tnhrc.gov.in என்ற இணையதளத்தில் அனுமதி சீட்டுக்கு பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம் என்றும் ஆன்லைனில் அனுமதி சீட்டு பெறாத பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.