‘ஃப்ரீயா குடுக்குறது எவன் வீட்டு காசுல’.. அதிமுகவை விளாசிய திருச்செந்தூர் மக்கள்!

 

‘ஃப்ரீயா குடுக்குறது எவன் வீட்டு காசுல’.. அதிமுகவை விளாசிய திருச்செந்தூர் மக்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தமிழகத்தை ஆண்டது இரு துருவம் தான். ஒன்று திமுக. மற்றொன்று அதிமுக. வரும் தேர்தலிலும் திமுக அல்லது அதிமுக தான் வெல்லும் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. இதனிடையே அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் மூன்றாவது அணியாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன.

இப்படி இருக்கும் சூழலில் மக்களின் ஆதரவு யாருக்கு? அதிமுக, திமுக தவிர மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா? உள்ளிட்ட பல கேள்விகளுடன் நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் 234 தொகுதிகளிலும் கருத்துக் கணிப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி திருச்செந்தூர்..

‘ஃப்ரீயா குடுக்குறது எவன் வீட்டு காசுல’.. அதிமுகவை விளாசிய திருச்செந்தூர் மக்கள்!

திமுகவின் கோட்டை:

1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் செல்லதுரை, 1996ல் திமுக சார்பில் ஜெனிபர் சந்திரன் வெற்றி பெற்றனர். இதையடுத்து 2001, 2006, 2010 இடைத் தேர்தல், 2011 மற்றும் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து வெற்றி வாகையை சூடினார். கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக 3 முறையும் திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

‘ஃப்ரீயா குடுக்குறது எவன் வீட்டு காசுல’.. அதிமுகவை விளாசிய திருச்செந்தூர் மக்கள்!

களம் காணும் வேட்பாளர்கள்:

திமுக சிட்டிங் எம்.எல்.ஏவான அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் இந்த தொகுதியில் களமிறங்குகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

#TTNsurvey ஆளப்போவது யார்?

திருச்செந்தூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவுக்கு தாவினார். திமுகவில் இணைந்த பிறகும் அனிதா ராதாகிருஷ்ணன் தான் இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி வாகையை சூடிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் வரும் தேர்தலிலும் மக்கள் அவருக்கு தான் வாக்களிக்க போகிறார்களா? அல்லது வேறு ஏதேனும் கட்சியை தேர்வு செய்யப் போகிறார்களா? என நமது செய்தியாளர் மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மக்கள் சிலர் உதயசூரியனையும், சிலர் இரட்டை இலையையும் கைக்காட்டினார்கள். மற்ற சிலர் தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பார்த்துவிட்டு தான் போட்டு போடுவோம் என்று சொன்னார்கள். கமல் நல்லா பேசுறாரு.. சீமான் நல்லா பேசுறாரு.. அவங்க வந்தா எப்படி இருக்கும்னு தெரியவில்லை என்றும் சிலர் சொன்னார்கள்.

‘ஃப்ரீயா குடுக்குறது எவன் வீட்டு காசுல’.. அதிமுகவை விளாசிய திருச்செந்தூர் மக்கள்!

இதைத்தொடர்ந்து தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏவான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டு கேக்க மட்டும் தான் வருவாரு, அதுக்கு பிறகு வரவே மாட்டாரு. அவருடைய செயல்பாடுகள் எல்லாம் கம்மி தான், எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருப்பதால் தொகுதிக்கு ஏதும் கிடைக்கவில்லை என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். திருச்செந்தூர் தொகுதிக்கு சாலை வசதி, தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

சர்வேயின் முடிவில் மக்களின் பெருவாரியான ஆதரவு திமுகவுக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவை சேர்ந்தவராக இருப்பதால் ‘அதிமுக எங்களுக்கு ஏதும் செய்யவில்லை’ என்பதே மக்களின் குற்றச்சாட்டு. நமது இந்த கணிப்பு தேர்தலில் பிரதிபலிக்கிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!