திமுகவில் மூன்றாவது விக்கெட்! நின்று விளையாடும் பாஜக!

 

திமுகவில் மூன்றாவது விக்கெட்! நின்று விளையாடும் பாஜக!

பாஜக வீசிய பந்தில் திமுகவில் மூன்றாவது விக்கெட்டும் விழப்போகிறது. அதுவும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த முக்கியப்புள்ளி என்றே தகவல்
கசிகிறது.

ஸ்டாலின் தலையீடு அதிகரித்த நேரத்தில் வெம்பி வெடித்த சீனியர்களை சமாதானப்படுத்தி வைத்திருந்தார் கலைஞர். ஆனால், திமுகவில் இப்போதைய
நிலைமையே வேறாக இருகிறது. உதயநிதிஸ்டாலின் தலையீடு அதிகரித்து வரும் நிலையில் பொங்கி எழும் சீனியர்களை ஸ்டாலினால் சமாதானப்படுத்த
முடியாத நிலையே இருக்கிறது. பாஜகவுக்குத்தான் இது ரொம்பவே சாதகமாக போய்விட்டது.

பாஜக ஆடிய ஆட்டத்தில் திமுகவில் இருந்து விழுந்த முதல் விக்கெட் வி.பி.துரைசாமி. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு அடுத்தபடியாக முக்கியமான துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்தாலும், உதயநிதி ஸ்டாலின் கையை பிடித்து கெஞ்சியும் ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த அவரை, சரியான நேரம் பார்த்து பாஜக தன் பக்கம் இழுத்துக்கொண்டது.

திமுகவில் மூன்றாவது விக்கெட்! நின்று விளையாடும் பாஜக!

திமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்றுவிட்டு ஒரு வருடத்திலேயே மீண்டும் திமுகவுக்கு வந்தவர்தான் வி.பி.துரைசாமி. வீரபாண்டி ஆறுமுகத்தின் அராஜகம்
தாங்கவில்லை என்று அதிமுகவுக்கு சென்று ராஜ்யசபா எம்.பி.யும் ஆன ஒரு வருடத்திலேயே, கலைஞர் அழைத்ததால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு
வந்தவர் துரைசாமி. அதற்கு கிடைத்த பரிசுதான் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவி. இந்த முறையும் அவர் போன வேகத்திலேயே மீண்டும்
திமுகவுக்கு வருந்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் மூலமாகவே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களை இழுக்க நினைத்திருக்கிறது பாஜக.

திமுகவில் மூன்றாவது விக்கெட்! நின்று விளையாடும் பாஜக!

துரைசாமி மூலமாக விரித்த வலையில்தான் கு.க.செல்வம் விழுந்திருப்பதாக தகவல். தான் எதிர்பார்த்திருந்த சென்னை மேற்கு மாவட்ட மா.செ. பதவி தனக்கு
கிடைக்காவிட்டாலும் உதயநிதிஸ்டாலின் கைகாட்டிய, தன்னைவிட ஜூனியருக்கு கிடைத்ததில் அதிருப்தியில் இருந்தவருக்கு பாஜக வலைவிரித்திருக்கும்
தகவல் கிடைக்கவே, ஆர்.எஸ்.பாரதி மூலமாக சமாதானப்படுத்த முயற்சித்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால், கடைசிவரை பிடிகொடுக்காமல் இருந்த செல்வம்,
டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டதாகவே தகவல் வந்தது. ’’எப்போதும் மோடியை
குற்றம் சாட்டும் ராகுல் காந்தியின் காங்கிரசை கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும், கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டதை ஸ்டாலின் கண்டிக்க
வேண்டும், ராமேஸ்வரத்திலும் அயோத்தியை போல கோயில் கட்ட வேண்டும்’’ என்றெல்லாம் செல்வம் பேசுவதும் அதை உறுதிப்படுத்தியது. ஆனால், தான்
பாஜகவில் சேரவில்லை, என்று செல்வம் சொன்னதில் குழப்பம் நீடித்தது.

திமுகவில் மூன்றாவது விக்கெட்! நின்று விளையாடும் பாஜக!

சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால், இப்போது பாஜகவில் இணைந்துவிட்டதாகச் சொன்னால், சட்டச்சிக்கல் ஏற்படும் என்றுதான் அவர் அதை வெளிப்படையாக
சொல்லாமல் இருக்கிறார் என்று பேசப்பட்டு வந்தாலும், உண்மை நிலவரம் அது இல்லை என்றே பேசப்பட்டது. திமுகவில் இருந்துகொண்டே தலைமைக்கு
குடைச்சல் கொடுத்து, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களை இழுத்து வரும் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.
இதை உணர்ந்த ஸ்டாலின், திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாலர் , தலைமை செயற்குழு உறுப்பினர் பொருப்புகளில் இருந்து செல்வம்
விடுவிக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கழக கட்டுப்பாட்டை மீறியதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஏன் தங்களை நீக்கக்கூடாது என்று
விளக்கம் கேட்டு செல்வத்திற்கு கடிதமும் அனுப்பிவிட்டார்.

திமுகவில் மூன்றாவது விக்கெட்! நின்று விளையாடும் பாஜக!

இதையடுத்து, தமிழக பாஜக அலுவலகத்தில் அயோத்தி ராமருக்கு நடந்த பூஜையில் பங்கேற்றதன் மூலம், செல்வமும் தான் பாஜகவில் இருப்பதை உறுதிப்படுத்திவிட்டார். ஆனால், செல்வம் மூலமாகபாஜக வீசிய பந்தில் திமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட், கட்சியில் இரண்டாம் கட்ட தலைவராக வலம் வரும், கல்வியாளரும், கவிதைக்காரருமான மனிதர் என்று தகவல்.

அதிமுகவில் இருந்து வந்து திமுகவில் செல்வாக்காக இருந்தாலும் அண்மைக்காலமாகவே அதிகம் கவனிக்கப்படாதவராகவே இருந்து வருகிறார். ஆத்திகரான இவர், பெண் தெய்வம் குறித்த சர்ச்சையில் சிக்கிய கவிஞருக்கு எதிராக பேசியதன் மூலமே, பாஜக பக்கம் போய்விட்டதாக திமுகவினர் கடுமையாக விமர்சித்த
நிலையில், தலைமை மீதும் அதிருப்தியில் இருந்து வரும் இவர், பாஜகவில் சேரப்போவது உறுதியாகிவிட்டது என்றே சொல்கிறார்கள்.

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த சீனியர்களில் முதற்கட்ட தலைவர்களும் இருக்கிறார்கள். தலைமை மீது அவர்களுக்கும் அதிருப்தி நிறையவே
இருப்பதால் அடுத்தடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பில் பரபரத்துக்கிடக்கிறது தமிழக அரசியல் களம்.