மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்காது – ஆய்வில் வெளியான தகவல்!

 

மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்காது – ஆய்வில் வெளியான தகவல்!

கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்காது என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. தற்போதைய நிலவரப்படி 8 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். நாளொன்றுக்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புகள் 2 ஆயிரத்துக்குக் கீழ் உள்ளது. இரண்டாம் அலையிலிருந்து இந்தியா மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்காது – ஆய்வில் வெளியான தகவல்!

மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில், இரண்டாவது அலை பாதிப்பு குறித்து 5 மாநிலங்களில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து எய்ம்ஸ் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்காது – ஆய்வில் வெளியான தகவல்!

பாதிப்பு அதிகமாக இருந்த டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அப்படியே பாதிக்கப்பட்டாலும் அறிகுறி இல்லாத பாதிப்பாக இருக்கும் என்று எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.