அடுத்த சில வாரங்களில் கொரோனா 3வது அலை : எச்சரிக்கை விடுக்கும் எய்ம்ஸ் தலைவர்!

அடுத்த சில வாரங்களில் கொரோனா 3வது அலை : எச்சரிக்கை விடுக்கும் எய்ம்ஸ் தலைவர்!

இந்தியாகொரோனா இரண்டாவது அலையில் சிக்கிக்கொண்டுள்ள நிலையில் அடுத்த 6 முதல் 8 வாரங்களில் மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் கொரோனா 3வது அலை : எச்சரிக்கை விடுக்கும் எய்ம்ஸ் தலைவர்!

இது குறித்து பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த எய்ட்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா, இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் போதும்பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் அளித்து வருகிறது. கொரோனா முதல் அலையிலும் சரி, கொரோனா இரண்டாவது அலையிலும் சரி மக்கள் வித பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் பாடம் கற்றுக் கொண்டதாகவும் தெரியவில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முறையாக முக கவசம் அணியாமல் மக்கள் சுற்றித் திரிகின்றனர். அதனாலேயே மூன்றாவது அலையை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு இந்தியா தள்ளப்படலாம்.

அடுத்த சில வாரங்களில் கொரோனா 3வது அலை : எச்சரிக்கை விடுக்கும் எய்ம்ஸ் தலைவர்!

அடுத்த 6 முதல் 8 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள நேரிடும். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை வெளிப்படையாக தெரிய சற்று காலதாமதம் ஏற்படும். ஆனால் அதன் பாதிப்பு இப்போதிலிருந்தே ஆரம்பித்துள்ளதாக நான் நினைக்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரிவரப் பின்பற்றாவிடில் நிச்சயமாக மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது ” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.