கிஷான் திட்டத்தில் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற நினைப்பதா? பாஜக கூட்டத்தில் கண்டனம்

கிஷான் திட்டத்தில் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற நினைப்பதா? பாஜக கூட்டத்தில் கண்டனம்

கிஷான் திட்டத்தில் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அரசு மீது பழி போடுவதாக கூறி முதல்வருக்கு கண்டனம் தெரிவித்து ஈரோடு பாஜ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிஷான் திட்டத்தில் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற நினைப்பதா? பாஜக கூட்டத்தில் கண்டனம்

ஈரோட்டில் தெற்கு மாவட்ட பாஜ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் குணசேகரன், விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிஷான் திட்டத்தில் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற நினைப்பதா? பாஜக கூட்டத்தில் கண்டனம்

இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜ மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில், பிரதம மந்திரி கிஷான் சம்மான் யோஜனா திட்டத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ரூ.110கோடி கையாடல் செய்த, உதவி புரிந்த வங்கி அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோசடியில் ஈடுபட்டுள்ள தமிழக அதிகாரிகளை காப்பாற்றும் வகையில் மத்திய அரசின் மீது பழியை போடும் தமிழக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிஷான் திட்டத்தில் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற நினைப்பதா? பாஜக கூட்டத்தில் கண்டனம்

மேலும், ஈரோடு மாநகரில் திட்டப்பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. திட்டப்பணிகள் முடிந்த பகுதிகளில் சாலைகளை உடனடியாக அமைக்க வேண்டும். ஈரோடு மேட்டூர் சாலை போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலை என்பதால், இரு வழிப்பாதையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கிஷான் திட்டத்தில் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற நினைப்பதா? பாஜக கூட்டத்தில் கண்டனம்