என்னை சகோதரனாக நினைத்துக்கொள்.. என்னை கல்யாணம் செய்துகொள் ..ராங் – கால் பெண்ணிடம் ராங் ரூட்டில் சென்ற இளைஞர்

 

என்னை சகோதரனாக நினைத்துக்கொள்.. என்னை கல்யாணம் செய்துகொள் ..ராங் – கால் பெண்ணிடம் ராங் ரூட்டில்  சென்ற இளைஞர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கா பிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன்(28). இவர் ஒரு நாள் செல்போனில் தவறுதலான எண்ணுக்கு தொடர்புகொண்டதால், அது தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் உள்ள திருமணமான இளம் பெண்ணுக்கு சென்றிருக்கிறது. எடுத்துப் பேசியவர், நீங்கள் குறிப்பிடும் அவர் நான் இல்லை. ராங் நம்பர் என்று சொல்லியிருக்கிறார்.

என்னை சகோதரனாக நினைத்துக்கொள்.. என்னை கல்யாணம் செய்துகொள் ..ராங் – கால் பெண்ணிடம் ராங் ரூட்டில்  சென்ற இளைஞர்

தான் பேச நினைத்த ஆண் குரல் இல்லாமல் திடீரென்று பெண் குரல் கேட்டதில் ஒரு மாதிரியாகி போன மஞ்சுநாதன் மீண்டும் வந்த அதே எண்ணுக்கு தொடர்புகொண்டு சாரி நான் தெரியாமல் இந்த நம்பரை போட்டு விட்டேன். சாரி சொல்வதற்காகத்தான் போன் செய்தேன் என்று சொல்லியிருக்கிறார். சரி பரவாயில்லை என்று சொல்லி இருக்கிறார் அந்த இளம்பெண்.

இதை அடுத்து மீண்டும் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து ஏதோ தெரியவில்லை உங்களுடன் பேசவேண்டும் போலிருந்தது. எனக்கு சகோதரி இல்லை. உங்களிடம் பேசியபோது ஒரு சகோதரியுடன் பேசுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதனால் என்னை சகோதரனாக நினைத்து கொள்ளுங்கள். நான் இப்போது உங்களிடம் பேசினால் ஒரு ஆறுதலாக இருக்கும் என்று சென்டிமென்டாக பேசியிருக்கிறார். இதில் ஏதோ அந்த இளம் பெண்ணும் மனம் உருகி சரி என்று சொல்லியிருக்கிறார்.

என்னை சகோதரனாக நினைத்துக்கொள்.. என்னை கல்யாணம் செய்துகொள் ..ராங் – கால் பெண்ணிடம் ராங் ரூட்டில்  சென்ற இளைஞர்

போனில் பேசிய அந்த பெண்ணை எப்படியாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் ஒரு செல்போன் வாங்கிக் கொண்டு கடந்த மார்ச் மாதம் நேரில் சென்று கொடுத்திருக்கிறார் மஞ்சுநாதன். அது ஆண்ட்ராய்டு செல்போன் என்பதால் முகநூல் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை அந்த இளம்பெண் பயன்படுத்தி வந்திருக்கிறார். வாட்ஸ்அப் மூலமாகவும் மஞ்சுநாதன் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்திருக்கிறார்.

இந்நிலையில் திடீரென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டிருக்கிறார் மஞ்சுநாதன். சகோதரன் என்று சொல்லிவிட்டு இப்போது திருமணம் செய்ய சொல்கிறீர்களே. எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அதனால் என்னிடம் இப்படி பேச வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுநாதன் அப்படி என்றால் நான் வாங்கி கொடுத்த செல்போனை திரும்ப கொடுத்து விடு என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து பயந்துபோன அந்த இளம்பெண் அந்த செல்போனை அப்படியே திருப்பிக் கொடுத்திருக்கிறார். திருப்பி கொடுக்கும் போது அதில் தான் பயன்படுத்தி வந்த சிம் கார்டு மற்றும் அதில் இருந்த தகவல்கள் எதையும் அழிக்காமல் அப்படியே கொடுத்திருக்கிறார்.

என்னை சகோதரனாக நினைத்துக்கொள்.. என்னை கல்யாணம் செய்துகொள் ..ராங் – கால் பெண்ணிடம் ராங் ரூட்டில்  சென்ற இளைஞர்

இதனால் அந்தப் பெண்ணின் முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் அந்த பெண்ணே பதிவு எழுதுவது போல் மஞ்சுநாதன் விளையாடி வந்திருக்கிறார். தானொரு பாலியல் தொழிலாளி என்றும் ஆண்களுக்கு அழைப்பு விடுப்பது போல் செல்போன் எண்ணுடன் பதிவிட்டிருக்கிறார் மஞ்சுநாதன். அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை அப்படியே வாட்ஸ் அப் மற்றும் முகமநூலில் பதிவிடாமல் மார்பிங் செய்து பதிவிட்டிருக்கிறார் மஞ்சுநாதன்.

இந்த தகவல் இளம்பெண்ணின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் அளிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவனை, உரிய விசாரணை மேற்கொண்டு கைது செய்யுமாறு உத்தரவிட்டு இருக்கிறார். இதை அடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மஞ்சுநாதன் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.