• February
    21
    Friday

Main Area

Main



வயதான பெற்றோர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதும்… நீங்கள் செய்ய வேண்டியதும்… நாளை உங்கள் குழந்தைக்கும் இதுதான் நடக்கும்..!?

Show love and understand the feelings of your parents
Show love and understand the feelings of your parents

மாடர்ன் கல்ச்சர் என்ற பெயரில் வயதான தங்களது பெற்றோர்களை அநாதை ஆசிரமத்திற்கோ அல்லது சர்வீஸ் ஹோம்கோ அனுப்பி வைக்கும் பிள்ளைகளே நிறைய இருக்கிறார்கள்.அது குறித்து யாரவது கேட்டால், “ அங்கிள் உங்களுக்கென்ன தெரியும் அந்த ஹோம்ல அப்படி பார்த்துப்பாங்க. எல்லா வசதிகளும் இருக்கு.அதுக்காக மாசத்துக்கு எவ்வளவு செலவு பண்ணுறோம்னு தெரியுமா..!?” என்று ஒரு பெரிய தொகையைச் சொல்லி தங்களது செயலை நியாயப்படுத்த முயற்சிப்பார்கள்.அவர்களெல்லாம் ஏதாவது ஒரு நாள் தனிமையில் உட்கார்ந்து தங்களது குழந்தைப் பருவத்திலிருந்து இன்று வாழும் ஆடம்பர வாழ்க்கை வரை கண்களை மூடி நிதானமாக ஒரு ரீவைண்ட் ஓட விட்டுப் பாருங்கள்.

love and care

நீங்கள் குழந்தையாக இருந்த போது உங்கள் பெற்றோர்களில் யாரவது ஒருவர் கண்டிப்பானதோரணையோடும்,இன்னொருவர் அளவுக்கு அதிகமாக செல்லங்கொடுத்து வளர்பவர்களாக இருந்திருப்பார்கள். நீங்கள் விரும்பியதை நீங்கள் கேட்காத போதுகூட வாங்கிகொடுத்திருப்பார்கள்.நீங்கள் சொல்வது சரியோ தவறோ நீங்கள் சொல்வதை கவனிக்க வேண்டும் என்று அடம்பிடித்திருப்பீர்கள்.அவர்களும் ஆச்சர்யமாக கேட்டுவிட்டு.. “அடடே.. என் செல்லத்துக்குத்தான் எம்புட்டு அறிவு..” உங்களைக் கொஞ்சி உச்சி முகர்ந்திருப்பார்கள்.

அதில் எவ்வளவு அபத்தங்களைப் பேசியிருப்போம்.!? ஆனாலும் உங்கள் வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்டார்களே...எதுக்கு? நம்ம குழந்தை நம்ம கிட்ட சொல்லாமல் யாருகிட்டப் போய் சொல்லும் என்ற அந்த அன்பின்     வெளிப்பாடுதானே! இப்போது நீங்கள் வளர்ந்து விட்டீர்கள் ; அவர்கள் குழந்தையாகிவிட்டார்கள்.இது ஒரு கால சுழற்சி! நாளை உங்கள் குழந்தைகள் வளரும்போது நீங்கள் மீண்டும் குழந்தையாகிவிடுவீர்கள் இதுதான் வாழ்க்கை.

Take care of your aged parents

இன்னும் சிலர் பெற்றோரை வீட்டில் வைத்து நன்றாகப் பார்த்துக்கொண்டாலும், பெரியவர்களுக்காக நேரம் ஒதுக்குவதே கிடையாது.அவர்களுக்கும் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கும்.உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றால் உங்கள் அலுவலகப் பிரச்சினையை வீட்டுக்கு வந்ததும் யாரிடமாவது காட்டுகிறீர்கள். உங்கள் பெற்றோர்,பாவம் பிள்ளை கஷ்டப்பட்டு வந்திருக்கான் என்று அவர்கள் பேச நினைத்தைதை கடைசிவரை பேசமுடியாமலே போய்விடும். 

 support your parents

உங்கள் பெற்றோர் உங்களிடம் எதிர்பார்ப்பது காசோ,பொருளோ இல்லை உங்கள் நேரத்தை மட்டுமே அவர்கள் எதிர்பார்த்து ஏங்குகின்றனர்.அவர்களிடம் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதேல்லாம் பேசுங்கள் அது அவர்களுக்கு ஒருவித சந்தோஷத்தையும் மன நிறைவையும் தரும். இப்போது உங்கள் வாழ்க்கை வட்டத்தில் வேறு சில உறவுகள் வந்துவிட்ட காரணத்தினால் உங்கள் பெற்றோரிடம் பேசுவதற்கு நேரம் இருந்தாலும் அவர்களுடன் செலவு செய்ய யோசிக்கிறீர்கள்.இதனால் அவர்கள் தனித்துவிடப்பட்டதைப்போலவும், யாரும் இல்லையெனவும் தங்கள் மனதில் எண்ணம் கொள்ளத்தொடங்குவார்கள்.
உங்களுக்கு நேரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பெற்றோர்களிடம் பேச தவறக்கூடாது.வீடியோ கால்,நார்மல் கால் என ஏதாவது செய்து அவர்களை தொடர்புகொள்ளவேண்டும்.நேரில் சென்று சந்தித்து பேசுவது இன்னும் நல்லது.வாரத்தில் ஒருமுறையாவது நேரில் சென்று பாருங்கள்.

Surprise your aged parents

உங்கள் பிறந்த நாளை உங்களுக்கு நெருக்கமானவர்கள் மறந்து போனால் உங்கள் மனது எவ்வளவு காயப்படும்.அப்படிதான் உங்கள் பெற்றோருக்கும். அவர்களது பிறந்த நாள்,திருமண நாளில் நேரில் சென்று அந்த நாளை கொண்டாட்டமானதாக மாற்றுங்கள்.நீங்கள் கொடுக்கும் பரிசுகளைவிட,நீங்கள் அவர்களோடு செலவிடும் நேரம்தான் அவர்களுக்கு கிஃப்ட்.

உங்கள் வாழ்க்கை தொடர்பான அல்லது வேலை தொடர்பான எதுவாக இருந்தாலும் பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.உங்களுக்கு அவர்களின் அனுபவத்திலிருந்து கிடைக்கும் ஆலோசனைகள் உங்களுக்கு திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும். அவர்கள் சொல்லும் கருத்து ஒண்ணுக்குமே உதவாது என்று தோன்றினாலும்,நீங்கள் ஆலோசனை கேட்பதால் ‘எங்கள் பிள்ளை எங்களைக் கேட்காமல் ஒரு முடிவும் எடுக்க மாட்டான்’ என்று அவர்கள் படுகிற மகிழ்ச்சி அவர்களின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும்.

Share your thoughts with your parents

உங்கள் பெற்றோர்களால் முன்பு போல எதையும் விரைந்து செய்ய முடியாது. நடைபயிற்சி செய்வதாக இருந்தால் அவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நீங்கள்தான் மெதுவாக நடக்க வேண்டும்.அதுபோல் அவர்கள் செய்யும் சின்னச்சின்ன வேளைகளில் அவர்களுக்கு உதவுங்கள. சிலர் வயது காரணமாகவும் உடல் உபாதைகள் காரணமாகவும் மனசு தளர்ந்து போவார்கள். அதெல்லாம் ஒண்ணும் ஆகாது என்று ஆறுதல் சொல்லுங்கள்.மொத்தத்தில் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்குங்கள்… உரையாடுங்கள் ; வாழ்க்கை அழகாகும்.

2018 TopTamilNews. All rights reserved.