“சைலன்சரை சைலண்டா உருவிட்டானுங்களே” -உஷார்! கார்களில் சைலன்சரை திருடி என்ன பண்றாங்க தெரியுமா ?

“சைலன்சரை சைலண்டா உருவிட்டானுங்களே” -உஷார்! கார்களில் சைலன்சரை திருடி என்ன பண்றாங்க தெரியுமா ?

மாருதி கார்களில் உள்ள சைலென்சர்களை குறிவைத்து திருடி பல லட்சங்களை சம்பாதித்த கூட்டத்தை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள் .

“சைலன்சரை சைலண்டா உருவிட்டானுங்களே” -உஷார்! கார்களில் சைலன்சரை திருடி என்ன பண்றாங்க தெரியுமா ?

கார்களில் உள்ள சைலன்ஸர்  குழாய்கள்   பல்லேடியம், பிளாட்டினம், ரோடியம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களால் தயாரிக்கப்படுகின்றன.இந்த உலோகங்கள் காரிலிருந்து வெளியேறும் புகையின் நச்சு தன்மையை குறைக்க உதவுகின்றன .

அதனால்  திருடர்கள் இந்த விலைமதிப்பற்ற உலோகங்களை சைலென்ஸர்  குழாய்களிலிருந்து பிரித்தெடுத்து அகமதாபாத் மற்றும் சூரத்தில் உள்ள கனரக தொழிற்சாலைகளுக்கு  விற்கிறார்கள். இந்த உலோகங்கள் தங்கத்தை விட விலைமதிப்பற்றவை ஆகும் .மேலும் ஒரு சைலென்ஸர் ரூ .57, 272 க்கு கள்ள சந்தையில் விற்கப்படுகிறது .

குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபத்தில் கடந்த  ஒரு வாரத்திற்குள் பல நூற்றுக்கணக்கான மாருதி கார்களில் உள்ள சைலன்சர்கள் திடீரென திருட்டு போனதை கண்டு கார் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள் .அதனால் அவர்கள் தங்களின் கார் டீலரிடம் இதுபற்றி புகார் கூறியபோது இந்த சைலென்சரின் விலை மதிப்பு தெரிய வந்தது .அதனால் போலீசாரிடம் புகார்கள் குவிந்தன .

அப்போது போலீசாரின் விசாரணையில் ,சனாதலில் உள்ள கிரண் மோட்டார்ஸில் உள்ள ஸ்டாக்யார்டில் நிறுத்தப்பட்டிருந்த 33 வாகனங்களிலும் , பக்ரோலில் உள்ள மற்றொரு டீலர் வெளியே நிறுத்தியிருந்த நூற்றுக்கணக்கான கார்களிலும் ,பல பொதுமக்களின் கார்களிலும் சைலென்சர்கள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது .கடந்த ஒரு வாரத்திற்குள் திருடு போன சைலன்சர்களின் மதிப்பு  21 லட்சம் என்று கணடறியப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சைலன்சர்களை  குறிவைத்து திருடும் கூட்டத்தை  வலைவீசி தேடி வருகிறார்கள் .

“சைலன்சரை சைலண்டா உருவிட்டானுங்களே” -உஷார்! கார்களில் சைலன்சரை திருடி என்ன பண்றாங்க தெரியுமா ?