மேற்கூரையை உடைத்து சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை: சென்டிமென்ட்டாக லெட்டர் எழுதிவைத்து விட்டு சென்ற திருடன்!

மேற்கூரையை உடைத்து சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை: சென்டிமென்ட்டாக லெட்டர் எழுதிவைத்து விட்டு சென்ற திருடன்!

சூப்பர் மார்கெட்டில் திருடிவிட்டு துண்டு சீட்டில் மன்னிப்பு கேட்டு எழுதிவிட்டு சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

மேற்கூரையை உடைத்து சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை: சென்டிமென்ட்டாக லெட்டர் எழுதிவைத்து விட்டு சென்ற திருடன்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கவுண்டன்பட்டியை சேர்ந்த ராஜாங்கம் மகன் ராம்பிரகாஷ். இவர் அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை கடையை திறந்துள்ளார் ராம்பிரகாஷ். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக ராம்பிரகாஷ் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

மேற்கூரையை உடைத்து சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை: சென்டிமென்ட்டாக லெட்டர் எழுதிவைத்து விட்டு சென்ற திருடன்!

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கடைக்குள் சோதனை நடத்தினர். அப்போது கடைக்குள் ஒரு துண்டு சீட்டு கைப்பற்றப்பட்டது. அதில், நான் திருடிய இந்த பொருட்கள் என் குடும்பத்திற்கு 3 மாதம் உணவளிக்கும். உங்களுக்கு இது ஒருநாள் வருமானம் தான். உங்கள் கடையில் திருடியதற்கு மன்னித்து விடுங்கள் என்று எழுதியிருந்தது. மொத்தம் அக்கடையில் திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு 70 ஆயிரம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்டிமென்டாக பேசி நூதன முறையில் திருடிய கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.