“ஒரே பணியில் வைத்து என் திறமையை முடக்கி விட்டனர்” – சகாயம்

 

“ஒரே பணியில் வைத்து என் திறமையை முடக்கி விட்டனர்” – சகாயம்

ஏழு ஆண்டுகள் ஒரே பணியில் வைத்து என் திறமையை முடக்கி விட்டனர் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

சகாயம் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிக் கொண்டு வந்தார். பின்னர் மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் சகாயம் சமீபத்தில் ஓய்வு பெற்றார். முக்கியமில்லாத பதவியில் பல ஆண்டுகளாக வைத்திருப்பதாக கூறிய சகாயம் இன்னும் பணிக்காலம் 3 ஆண்டுகள் இருந்த நிலையில் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

“ஒரே பணியில் வைத்து என் திறமையை முடக்கி விட்டனர்” – சகாயம்

அரசுப்பணியிலிருந்து விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த சகாயத்தை ஒருமுறை கூட ஏன் விருப்ப ஒய்வு பெறுகிறீர்கள் என்று கேட்கவில்லையாம். அதேபோல் அவர் காந்தி மறைந்த தினமான ஜனவரி 31 ஆம் விருப்ப ஓய்வு கேட்டிருந்த நிலையில், அதையும் நிராகரித்த தமிழக அரசு, அதற்கு முன்னதாக ஜனவரி 6 ஆம் தேதி அவரை பணியிலிருந்து விடுவித்தது.

“ஒரே பணியில் வைத்து என் திறமையை முடக்கி விட்டனர்” – சகாயம்

இந்நிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அளித்துள்ள பேட்டியில், “நான் வழிகாட்டியாக உள்ள மக்கள் பாதை அமைப்பு இளைஞர்கள் அரசியலில் களம் ஆடுவார்கள். ஏழு ஆண்டுகள் முக்கியமில்லாத ஒரே பணியில் வைத்து என் திறமையை முடக்கி விட்டனர்” என்று தெரிவித்துள்ளனர்.