’இந்த இரண்டு வீரர்கள் போதும்.. கோலி இல்லாட்டியும் வெல்லலாம்’ ஹர்பஜன் சொல்வது யாரை?

 

’இந்த இரண்டு வீரர்கள் போதும்.. கோலி இல்லாட்டியும் வெல்லலாம்’ ஹர்பஜன் சொல்வது யாரை?

ஐபிஎல் போட்டிகள் முடிந்த சூட்டோடு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செல்ல புறப்பட்டு சென்றுவிட்டது. நவம்பர் 27 – லிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் மோத இருக்கின்றன.

இந்தப் போட்டிகளில் விளையாட தமிழக வீரர்கள் நடராஜன் தங்கராசு, ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிடன் சுந்தர் ஆகியோரு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் மற்றொரு வீரரும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தியும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு உடல் காயத்தால் ஆஸ்திரேலியா செல்ல முடியவில்லை.

’இந்த இரண்டு வீரர்கள் போதும்.. கோலி இல்லாட்டியும் வெல்லலாம்’ ஹர்பஜன் சொல்வது யாரை?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்காவுக்கு ஜனவரி மாத இறுதியில் பிரசவம் என்பதால், கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டு, இந்தியா வந்துவிடுகிறார். அதனால், மீதமிருக்கும் மூன்று போட்டிகளை ரோஹித் ஷர்மா கேப்டனாக வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை.

’இந்த இரண்டு வீரர்கள் போதும்.. கோலி இல்லாட்டியும் வெல்லலாம்’ ஹர்பஜன் சொல்வது யாரை?

இந்நிலையில் விராட் கோலி கேப்டனாக மட்டுமல்ல, நல்ல பேட்ஸ்மேனாகவும் அணிக்கு நல்ல பங்களிப்பைச் செலுத்துபவர். அதனால், அவர் இல்லாதது அணியின் வெற்றியைப் பாதிக்குமா என்ற விவாதம் கிளம்பியுள்ளது. இதற்குப் பதில் சொல்லும் விதமாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

”விராட் கோலி நிச்சயமாக நல்ல பேட்ஸ்மேன்தான். அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடாதது இழப்புதான். ஆனால்,  இந்திய தோல்வியைக் கண்டுவிடும் அளவுக்கு போய்விடாது. கே.எல்.ராகுல் மற்றும் புஜாரா நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அவர்கள் கோலியின் இடத்தை நிரப்புவார்கள்” என்று கூறியிருக்கிறார்.