ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் டாப் 4 இடங்களைப் பிடித்த அணிகள் இவைதாம்!

 

ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் டாப் 4 இடங்களைப் பிடித்த அணிகள் இவைதாம்!

ஐபிஎல் திருவிழாவில் ஒவ்வொரு போட்டியும் த்ரில் நிறைந்ததாகவே இருக்கிறது. கடைசி பந்து வரை வெற்றி பெற போவது யார் என்று கணிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக முடியாத அளவுக்கு விறுவிறுப்பாகச் செல்கின்றன. சில அணிகள் தொடர்ந்து வெற்றியும் சில அணிகள் தொடர் தோல்விகளையும் சந்தித்து வருகின்றன. எந்தெந்த அணிகள் பாயிண்ட் டேபிளில் எந்தெந்த இடத்தைப் பிடித்திருக்கின்றன என்று பார்ப்போம்.

ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் டாப் 4 இடங்களைப் பிடித்த அணிகள் இவைதாம்!

எட்டுப் போட்டிகளில் ஆடி, ஆறு போட்டிகளில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 புள்ளிகளோடு முதலிடத்தில் நிலைத்து நிற்கிறது. ஏழு போட்டிகளில் ஆடி, ஐந்து போட்டிகளில் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி 10 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கொல்கத்தா அணியோடு இன்றைய போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் வென்றால் முதலிடம் பிடிக்கவும் மும்பைக்கு வாய்ப்பிருக்கிறது.

எட்டுப் போட்டிகளில் ஆடி ஐந்தில் வென்று 10 புள்ளிகளோடு (நெட் ரன்ரேட் அடிப்படிடையில்) மூன்றாம் இடத்தில் உள்ளது ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர். நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியிருந்தால் முன்னேறியிருந்திருக்கலாம்.

ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் டாப் 4 இடங்களைப் பிடித்த அணிகள் இவைதாம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீம், ஏழு போட்டிகளில் ஆடி, நான்கில் வென்று 8 புள்ளிகளோடு நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. இன்றைய போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை நெட்ரன்ரேட் அதிகரிக்கும் வகையில் வென்றால் பட்டியலில் கொல்கத்தா முன்னேற வாய்ப்பிருக்கிறது.

ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இது எட்டுப்போட்டிகளில் ஆடி, மூன்றில் வென்று நெட்ரன்ரேட் அதிகம் என்பதால் ஐந்தாம் இடத்தில் குடிகொண்டுள்ளது. ஆறாம் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இதுவும் எட்டுப்போட்டிகளில் ஆடி, மூன்றில் வென்றுள்ளது என்றாலும் நெட் ரன்ரேட் குறைவு என்பதால் ஆறாம் இடம்.

ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் டாப் 4 இடங்களைப் பிடித்த அணிகள் இவைதாம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் டீம் எட்டுப்போட்டிகளில் ஆடி, மூன்றில் வென்றாலும் நெட்ரன்ரேட் அடிப்படையில் ஏழாம் இடத்தில் உள்ளது.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, எட்டுப்போட்டிகளில் ஆடி, இரண்டில் மட்டுமே வென்றதால் 4 புள்ளிகளோடு கடைசி இடமான எட்டாம் இடத்தில் உள்ளது.

ஐபிஎல் பாயிண்ட் டேபிளில் டாப் 4 இடங்களைப் பிடித்த அணிகள் இவைதாம்!

ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல மொத்தம் நான்கு அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பு. அதில் டெல்லி, மும்பை அணிகள் முன்னிலையில் உள்ளன. அடுத்து பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை என மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்குப் போட்டி போடுவது போல சூழல் அமைந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் எந்தெந்த அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்லும் என்று.