கொரோனா இறப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் இவைதாம்

 

கொரோனா இறப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் இவைதாம்

கொரோனாவைப்போல உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பேரிடர் இதற்கு முன் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு உலகின் அத்தனை நாடுகளிலும் கொரோனா தாக்கம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 60 லட்சத்து 45 ஆயிரத்து 050 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 71 லட்சத்து 49 ஆயிரத்து 223 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 54 ஆயிரத்து 607 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 78,41,220 பேர்.

கொரோனா இறப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் இவைதாம்

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 77,22,746 பேரும், இந்தியாவில் 67,57,131 பேரும், பிரேசில் நாட்டில் 49,70,953 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனாவின் மொத்த மரணம் உலகையே உலுக்கி வருகிறது. தற்போதைய நிலையில் கொரோனா இறப்பு அதிகம் உள்ள முதல் பத்து நாடுகள் எவையெனப் பார்ப்போம்.

1.அமெரிக்கா: 2,15,909 பேர் மரணாம். கொரோனா பாதிப்பு தொடங்கியது முதலே அமெரிக்காவில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகம். தற்போது புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

2.பிரேசில்: 1,47,571 பேர் மரணம். இங்குமே கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது முன்பை விட சற்று குறைந்து வருகிறது.

கொரோனா இறப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் இவைதாம்

3.இந்தியா: 1,04,651 பேர் மரணம். தொடக்கத்தில் மெதுவாக அதிகரித்த கொரோனா தொற்று சட்டென்று வேகம் பிடித்தது. இன்று வரை அதிகரித்துகொண்டே செல்கிறது.

4.மெக்சிகோ: 82,348 பேர் மரணம். சிறிய நாட்டில் இந்த எண்ணிக்கை மிக மிக அதிகம்.

5.யுனைடெட் கிங்டம்: 42,445 பேர் மரணம். தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

6.இத்தாலி: 36,030 பேர் மரணம். தொடக்கத்தில் அதிகமாக இருந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

கொரோனா இறப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் இவைதாம்

7.பெரு: 32, 914 பேர் மரணம். 8. ஸ்பெயின்: 32,486 பேர் மரணம்

9.ஃப்ரான்ஸ்: 32,365 பேர் மரணம். 10. ஈரான்: 27,658 பேர் மரணம்.

நாள் தோறும் அதிகரித்து வரும் மரணங்களின் எண்ணிக்கை உலகம் முழுவதுமே அச்சத்தை அளித்து வருகிறது.