பிளே ஆஃப் சுற்றில் மோதிக்கொள்ளும் அணி இவைதான்! – ஐபிஎல் #IPL

 

பிளே ஆஃப் சுற்றில் மோதிக்கொள்ளும் அணி இவைதான்! – ஐபிஎல் #IPL

கொரோனா அச்சம், வெளிநாட்டில் நடப்பதால் ரசிகர்கள் ஆதரவு இருக்குமா… வீரர்கள் நோய் குறித்த பயமில்லாமல் ஆடுவார்களா… என ஏகப்பட்ட கேள்விகளோடு தொடங்கியது ஐபிஎல் 2020. ஆனால், இதுவரை 56 போட்டிகள் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வோர் அணியும் 14 போட்டிகள் ஆடி, அவற்றின் மூலம் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியாகியுள்ளன. நேற்று நடந்த கடைசி லீக் போட்டி வரை எந்த அணியெல்லாம் பிளே ஆஃப்க்குச் செல்லும் என சஸ்பென்ஸ் இருந்துகொண்டே இருந்தது.

பிளே ஆஃப் சுற்றில் மோதிக்கொள்ளும் அணி இவைதான்! – ஐபிஎல் #IPL

ஆடிய 14 போட்டிகளில் 9 -ல் வென்று 18 புள்ளிகளோடு முதல் இடத்தில் மும்பை இண்டியன்ஸூம், 8 போட்டிகளில் வென்று 16 புள்ளிகளோடு 2-ம் இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸூம் உள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுருவும் 7 போட்டிகளில் வென்று 14 புள்ளிகள் எடுத்திருந்தன. ஆனால், பெங்களூருவை விட ஹைதராபாத் ரன்ரேட் அதிக இருந்ததால் அது மூன்றாம் இடத்தையும், பெங்களூர் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன.

பிளே ஆஃப் சுற்றில் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதிப் போட்டியில் மும்பையும் டெல்லியும் மோதும் ஆட்டம், நாளை நடக்கிறது. இதில் வெல்லும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்று விடும்.

பிளே ஆஃப் சுற்றில் மோதிக்கொள்ளும் அணி இவைதான்! – ஐபிஎல் #IPL

இன்னொரு போட்டி, 6-ம் தேதி பெங்களூரும் ஹைதராபாத்தும் மோதுகின்றன. இதில் வென்ற அணியும், முதல் தகுதிப் போட்டியில் தோற்ற அணியும் அடுத்ததாக மோதும். அதில் வெல்லும் அணியே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் இரண்டாம் அணி.

இறுதிப்போட்டியில் வெல்லும் அணியே ஐபிஎல் 2020 ஆம் ஆண்டின் சாம்பியன் கோப்பையைத் தட்டிச் செல்லும்.