Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் குறைவான நேரத் தூக்கம் கொடுக்கும் 5 சாபங்கள் இவைதாம்!

குறைவான நேரத் தூக்கம் கொடுக்கும் 5 சாபங்கள் இவைதாம்!

’துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்;
தூக்கம் மறக்கும் கனவைக் கேட்டேன்…’

என்று கவிஞர் வைரமுத்து திரைப்படப் பாடலில் எழுதியிருப்பார். துக்கத்தையே மறக்கச் செய்யும் வரம் கொடுப்பது தூக்கம்தான்.

ஒரு நாள் சரியாக முடிகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ள சரியான நேரத்தில் தூங்கச் செல்வதை வைத்துதான் முடிவு எடுக்க முடியும். ஏனெனில், ஒரு வேலையை சரியான நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்தில் முடிப்பதைப் போலவே தூக்கத்தையும் சரியான நேரத்தில் துவங்கி, சரியான நேரத்தில் விழிக்க வேண்டும்.

தூக்கம் உடலையும் மனத்தையும் இளைப்பாற வைக்கிறது. அடுத்த நாள் நீங்கள் இயங்குவதற்கான உற்சாகத்தை அளிப்பதும் தூக்கம்தான். எனவே, தூக்கம் போதுமான அளவு இல்லையெனில், மேற்சொன்ன இரண்டிலும் பாதிப்பு ஏற்படும்.

ஒரு சாராசரி மனிதர் 6 – 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், தூங்கும் ஒருவர் தானாக விழிக்கும் நேரம் வரை அவர் தூங்குவது சரி என்றும் மருத்துவ முறையில் சொல்லப்படுவது உண்டு.

குறைவான நேரம் தூங்கினால் நேரம் மிச்சமாகுமே என்று சிலர் கேட்கலாம். மிச்சப்படுத்த எவ்வளவோ இருக்க, தூங்கும் நேரத்தில் அதைக் காட்ட வேண்டாம் என்பதே மருத்துவம் சொல்லும் பதில்.

சரி, குறைவான நேரம் மட்டுமே தூங்கினால் என்னவாகும்? நிறைய பிரச்னைகள் வரும். அவற்றில் முக்கியமான ஐந்து சாபங்களை மட்டும் பார்ப்போம். ஆம், நாமாகவே விரும்பி வாங்கிக்கொள்ளும் சாபங்கள்.

ஒன்று: தூக்கம் குறைவதால் உடல் மற்றும் மனம் ஆகியவற்றிற்கு போதுமான ஓய்வு கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் இரண்டுமே பலவீனமடைகின்றன. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையவும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறதாம். கொரோனா நோய்ப் பரவும் இந்தக் காலகட்டத்தில் நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமே தவிர குறைத்துக்கொள்ள கூடாது.

தூக்கம்

இரண்டு: தொடர்ந்து பல நாட்களுக்கு அல்லது மாதங்களுக்கு போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு தலைவலி, செரிமானச் சிக்கல், உடல் சூடு, உடல் சோர்வு ஆகியவை ஏற்படும். இவர்களில் பலருக்கு பகலில் தூக்கம் வரக்கூடும். அப்படி வந்தால், உங்களின் வழக்கமான வேலைத் திட்டத்தில் பெரும் மாறுதல் ஏற்படும்.

மூன்று: தூக்கம் குறைவாக இருப்பது நீண்ட காலம் நீடிக்கும்பட்சத்தில் ஹார்மோன்களின் சமச்சீர்த் தன்மை அடையும் என்று அமெரிக்காவில் ஆய்வு தெரிவித்துள்ளது. ஹார்மோன்களில் மாறுதல் ஏற்பட்டால் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நான்கு: சரியான அளவு தூங்க வில்லை என்றால், மன அழுத்தம் ஏற்பட நிறையவே வாய்ப்பிருக்கிறது. மன அழுத்தத்தைப் போல வேறொரு துன்பம் இல்லை. மனம் சரியாக இல்லையெனில், அது உடலையும் வெகுவாகப் பாதிக்கும். மேலும், அது நாம் பார்க்கும் வேலையிலும் வெளிப்படும். நம்முடைய முழுத் திறனை வெளிப்படுத்த விடாமல் தடுக்கும்.

ஐந்து: தூக்கம் குறைவாக இருப்பவர்களுக்கு உடல் வலி, ஆஸ்துமா, மூட்டு வலி அதிகளவில் வரக்கூடும். உறங்கும்போது மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகம் இருக்கும். அதனால், ஞாபகச் சக்தி திறன் மேம்படும். அதற்கு மாறாக, தூக்கம் குறைந்தால் மறதி ஏற்படக்கூடும்.

இன்னும் பலவும் இருக்கின்றன. எனவே, தூங்குவதற்கு சரியான நேரத்தை ஒதுக்குங்கள். உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மொபைல், டிவி, கம்ப்யூட்டர் ஆகியவற்றிலிருந்து விலகியிருங்கள்.

விளக்குகளை அணைத்து இருட்டான சூழலில் தூங்குங்கள். விடியற்காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து அன்றைய நாளைத் தொடங்குங்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கொரோனா தொற்றுநோய் மத்தியிலும் 3 மாதத்தில் ரூ.39,510 கோடிக்கு தங்கத்தை வாங்கி குவித்த மக்கள்

கொரோனா தொற்றுநோய் மத்தியிலும் இந்தியாவில் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.39,510 கோடிக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. மஞ்சள் உலோகமான...

கை கொடுத்த வட்டி வருவாய்… ரூ.1,683 கோடி லாபம் ஈட்டிய ஆக்சிஸ் வங்கி…

ஆக்சிஸ் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,683 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி தனது செப்டம்பர்...

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய 49 ஆவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்...
Do NOT follow this link or you will be banned from the site!