Home உலகம் ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ள 2 இந்தியர்கள் இவர்கள்தாம்!

ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ள 2 இந்தியர்கள் இவர்கள்தாம்!

அமெரிக்காவில் இம்மாதம் 3-ம் தேதி அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தகில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

பெரும் இழுபறியாக இருந்து வந்த தேர்தல் முடிவில் ஜோ பைடன் பெருவாரியான வெற்றி பெற்றி 306 வாக்குகளைப் பெற்றார். அதிபராகும் மெஜாரிட்டி வாக்குகள் 270 –தான். ஆயினும் இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடுவதும், ட்விட்டரில் பதிவிடும் தொடர்கதையாகி வருகிறது. தேர்தலில் முறைகேடு நடக்க வில்லை என்று சொன்ன அதிகாரியை டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு கோபத்தில் மூழ்கியிருக்கிறார்.

ஆனால், மறுபக்கம் ஜோ பைடன் அடுத்த ஆட்சி அமைப்பதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். அமெரிக்காவின் பெரும் துயரம் கொரோனா பரவல்தான். அதைக் கட்டுப்படுத்த மருத்துவக்குழு ஒன்றை அமைத்திருக்கிறார். மேலும், அதிகாரத்தை ட்ரம்ப் வசமிடருந்து கைமாற்றவும் குழுக்கள் அமைத்திருக்கிறார். இந்தக் குழுக்களில் இந்தியர்கள் இடம்பெற்றிருப்பது தெரிந்த செய்தியே.

தற்போது ஜோ பைடன் அமைக்கவிருக்கும் அமைச்சரவையில் இரண்டு இந்தியர்கள் இடம்பிடிப்பார்கள் என்று தெரிகிறது.

ஒருவர் விவேக் மூர்த்தி. கர்நாடக மாநிலத்தைப் பூர்விகமாக கொண்ட இவர், தற்போது ஜோ பைடனில் கொரோனா ஆலோசனை குழுவில் துணை தலைவராக உள்ளார். இவருக்கு சுகாதாரம் தொடர்பான இலாகா ஒதுக்கப்படலாம் என்று பேச்சு உலாவுகிறது.

மற்றொருவர் பேராசிரியர் அருண் மஜூம்தார். இவர் ஸ்டான்ஃபோர்ட்  யுனிவர்சிட்டியில் பேராசியராக உள்ளார். இவருக்கும் ஜோ பைடனின் அமைச்சரவையில் முக்கிய இலாகா ஒதுக்கப்படக்கூடும் என எதிர்பார்ப்பு இருக்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

வடசென்னையில் 16 செ.மீ மழை பதிவு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இருந்து 350 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கும் நிவர் புயல் நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை 145 கி.மீ வேகத்தில் காற்று...

வேல் யாத்திரைக்கு கூட்டம் திரட்ட துணை நடிகைகளின் குத்தாட்டமா?

முருகக் கடவுளை முன்வைத்து கடந்த 20 நாட்களுக்கு மேல் தமிழக பாஜக வேல் யாத்திரையை நடத்தி வருகிறது.திருத்தணியில் தொடங்கிய இந்த யாத்திரை திருச்செந்தூரில் முடிப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.

அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள நிலையில் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளார். மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி...

பாலியல் குற்றமா… இனி இதுதான் தண்டனை! அதிர வைக்கும் பாகிஸ்தான்

இந்தியாவில் ஒரு வருடத்திற்கு பாலியல் வழக்குகள் மட்டுமே 33 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதியப்படுகின்றனவாம். கணக்கிட்டுப் பார்த்தால் நாள் ஒன்றுக்கு 90 வழக்குகளுக்கும் அதிகம். அப்படியெனில் ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ...
Do NOT follow this link or you will be banned from the site!