ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 நாடுகள் இவைதாம்!

 

ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 நாடுகள் இவைதாம்!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 2 லட்சத்து 87 ஆயிரத்து 371 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 18 ஆயிரத்து 396 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 1 லட்சத்து 21 ஆயிரத்து 710 நபர்கள்.

ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 நாடுகள் இவைதாம்!

சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், பல நாடுகளில் அதிகரிப்பதையும் காணமுடிகிறது. நேற்று மாலை வரையிலான கணக்கின்படி, ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 நாடுகள் எவை என்று பார்ப்போம்.

முதலிடத்தில் அமெரிக்கா: கொரோனா பாதிப்பில் தொடக்கம் முதலே அமெரிக்காவே முதல் இடத்தில் உள்ளது. இங்கு ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை 27,05,385.

இரண்டாம் இடத்தில் இந்தியா: புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள நாடு இந்தியா. இங்கு ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை 7,73,701.

ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 நாடுகள் இவைதாம்!

மூன்றாம் இடத்தில் பிரான்ஸ்: இரண்டாம் அலை கொரோனா வீசும் நாடு இது. இங்கு ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை 7,58,861.

நான்காம் இடத்தில் பிரேசில்: கொரோனா பாதிப்பில் 1.50 லட்சம் பேரைப் பறிகொடுத்த நாடு இது. இங்கு ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை 4,31,409.

ஐந்தாம் இடத்தில் ரஷ்யா: கொரொனா நோயாளிகள் மெதுவாக அதிகரிக்கும் நாடு ரஷ்யா. இங்கு ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை 3,04,571.

ஆறாம் இடத்தில் உள்ள பெல்ஜியத்தில் ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை 1,81,649. ஏழாம் இடத்தில் உள்ள உக்ரைனில் ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை 1,67,888.

ஆக்டிவ் கேஸஸ் அதிகம் உள்ள 10 நாடுகள் இவைதாம்!

எட்டாம் இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவில் ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை 1,59,448. ஒன்பதாம் இடத்தில் உள்ள மெக்சிகோவில் ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை 1,45,369.

பத்தாம் இடத்தில் உள்ள நாடு இத்தாலி. இங்கு ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை 1,26,237.

பிரேசில், இத்தாலி, அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கூடுவதும் குறைவதுமாக இருக்கிறது.