ஹெட்போன் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்!

 

ஹெட்போன் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்!

நள்ளிரவு நேரம். வேகமாக அந்தப் பேருந்து சென்றுகொண்டிருக்கிறது. பயணிகள் எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள். திடீரென்று ஒரு பாடல் சத்தமாக ஒலிக்கிறது. தூங்கிக் கொண்டிருந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் விழித்து விட்டார்கள்.

பயணிகளில் ஒருவருக்கு தூக்கம் சரியாக வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார். சரி, தூக்கம்தான் வரல… பாட்டாவது கேட்கலாமே என்று அவர்தான் மொபைலில் பாடலை ஒலிக்கச் செய்திருக்கிறார். அதனால்தான் எல்லோருமே தூக்கத்திலிருந்து விழிக்க வேண்டியதாயிற்று. ஒருவர் அந்தப் பயணியிடம் சென்று, ‘பாட்டு கேட்கிறதுன்னா.. ஹெட்போன் போட்டுட்டு கேட்க வேண்டியதுதானே?’ என்று திட்டிவிட்டு வந்தார்.

ஹெட்போன் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்!

ஹெட்போன் என்பது மற்றவர்களுக்குத் தொந்திரவு தராமல் நாம் மட்டுமே கேட்பதற்காகப் பயன்படுத்துவது இல்லை. நல்ல மியூஸிக்கை அதன் முழு பரிமாணத்தையும் உணர்ந்துகொள்ளவும் ஹெட்போன்கள் உதவுகின்றன.

ஆனால், நாம் ஹெட்போன் வாங்கும்போது அதன் விலையை மட்டுமே பார்த்து வேண்டுமா… வேண்டாமா என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம். உண்மையில் காதுகளோடு அதிக நேரம் இருக்கப்போகும் ஹெட்போன்களை வாங்கும்முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. அப்போதுதான் காதுகளைப் பாதுகாப்பதுடன், இசையின் முழுமையைக் கேட்க முடியும்.

ஹெட்போன் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்!

ஒன்று: முதலில் என்ன விதமான ஹெட்போன் வாங்குவது என்று தெளிவாக முடிவெடுங்கள். வீட்டுக்குள் மட்டுமே தான் பயன்படுத்தப்போகிறேன். அதான் பெரிய அளவிலான ஹெட் செட் உள்ள ஹெட்போனை வாங்கிவிட்டு பிறகு வெளியே எடுத்துச் செல்ல முடியவில்லை என்று வருத்தப்படக்கூடாது. அதனால் எந்த வகை என்பதைத் தெளிவாக முடிங்கள்.

ஹெட்போன் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்!

இரண்டு: வெளியில் அடிக்கடிச் செல்பவர்கள் எனில், வியர்க்கும்படியான சூழல் இருக்கும். இப்போதெல்லாம் வாட்டர் புரூப் வகை ஹெட்போன்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்குவதற்கு முடிவு செய்யலாம். அவற்றிலும் நல்ல தரமான கம்பெனிகளில் ஹெட் போன்களைத் தேர்வு செய்யலாம்.

ஹெட்போன் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்!

மூன்று: நம் காதுகள் இயல்பாகவும் பாதுகாப்பாகவும் கேட்கக்கூடிய ஒலி அளவு 20 முதல் 40 டெசிபல்தான். எனவே இதை ஹெட்போன் வாங்கும்போது நினைவில் வைத்திருக்க வேண்டும். சில ஹெட்போன்களில் 40 டெசிபலுக்கு மேல் எனப் போட்டிருக்கும். அவற்றை வாங்குவதால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், அந்தளவு சத்தம் வைத்து நாம் கேட்க போவதில்லை. ஒலி அளவு குறித்து ஹெட்போன் வாங்கும்போது மட்டுமல்ல, பயன்படுத்தும்போதும் மறக்காமல் நினைவில் வையுங்கள். அதிக சத்தம் பதற்றம், தலைவலி என பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடக்கூடும்.

ஹெட்போன் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்!

நான்கு: மொபைலில் நிறைய அழைப்புகளை அட்டெண்ட் பண்ணுபவராக இருந்தீர்கள் எனில், ஹெட்போன் வாங்கும்போது அதில் இணைக்கப்பட்டிருக்கும் மைக் குறித்து கவனம் வையுங்கள். ஏனெனில், சில ஹெட்போன்களில் மைக் ரொம்பவே கீழே இருக்கும். எனவே, அதைக் கையில் வைத்துக்கொண்டு பேசினால்தான் மறுபுறம் கேட்கும் எனும் நிலை வந்துவிடும். எனவே, அதிகம் பேசுபவர் எனில் மைக் சற்று மேலே உள்ளதைப் போன்ற ஹெட்போன்களே சிறந்தது.

ஹெட்போன் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்!

ஐந்து: தற்போது ப்ளூடூத் ஹெட்போன்களை அதிகம் வாங்க விரும்புகிறார்கள். அது பயன்பாட்டுக்கு நல்லதுதான். ஒயர்கள் அங்கும் சுற்றிக்கொள்ளாமல், பார்ப்பதற்கு டீசண்ட்டாக இருக்கும். அதிகளவில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவியாக இருக்கும் உண்மைதான். ஆனால், ப்ளூடூத் ஹெட்போன்கள் விலை அதிகம். எனவே, உங்களுக்கு மிக அவசியம் எனில் மட்டுமே இதை வாங்குங்கள். தேவையில்லாமல் அதிக பணத்தை இதற்காக இழக்க வேண்டாம்.