இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 60 சதவிதம் இந்த 5 மாநிலங்களில்தான்

 

இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 60 சதவிதம் இந்த 5 மாநிலங்களில்தான்

இந்தியாவில் இந்த் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா நோய்ப் பரவல் தற்போது உச்சகட்டத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 72 லட்சத்து  92 ஆயிரத்து 585 பேர்.  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 93 லட்சத்து 77 ஆயிரத்து 268 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 88 ஆயிரத்து 554 பேர்.

இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 60 சதவிதம் இந்த 5 மாநிலங்களில்தான்

அமெரிக்காவில் 31,110 பேரும், பிரேசிலில் 14,606 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 91,723 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

அமெரிக்காவை விட மூன்று மடங்கு புதிய நோயாளிகள் இந்தியாவில் அதிகரிக்கின்றன. ஆகஸ்ட் 22 அன்று இந்தியாவில்  30 லட்சம் பாதிப்புகளைக் கடந்தது. அடுத்த 12 நாட்களில் 10 லட்சம் அதிகரித்துவிட்டது. ஆனால், அமெரிக்கா, பிரேசிலில் பாதிப்பின் எண்ணிக்கை குறைகிறது. இதே நிலை நீடித்தால் உலகளவில் முதல் இடத்திற்கு இந்தியா சென்றுவிடும் அபாயம் இருக்கிறது.

இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 60 சதவிதம் இந்த 5 மாநிலங்களில்தான்

இந்தியாவின் மொத்த பாதிப்பில் 60 சதவிகிதம் 5 மாநிலங்களில்தான் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவைரஸ் பாதிப்புகளில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை, 32.5 லட்சத்தை இன்று கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 69,564 நோயாளிகள் குணமடைந்த நிலையில், குணமடைதல் விகிதம் 77.31 சதவீதத்தை தொட்டது.

இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 60 சதவிதம் இந்த 5 மாநிலங்களில்தான்

 கொரோனா தடுப்புச் செயல்பாடுகளின் மூலம் இறப்பு விகிதமும் குறைந்து, 1.70 சதவீதமாக தற்போது உள்ளது. நாட்டின் 60 சதவீதம் மொத்த பாதிப்புகள்  ஐந்து மாநிலங்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விவரம்: மகாராஷ்டிரா (21.6%), ஆந்திரப் பிரதேசம் (11.8%), தமிழ்நாடு (11.0%), கர்நாடகா  (9.5%)  மற்றும் உத்திரப் பிரதேசம் (6.3%).

அதிக தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கையும் இதே மாநிலங்களில் தான் உள்ளது: மகாராஷ்டிரா (26.76%), ஆந்திரப் பிரதேசம் (11.30%), கர்நாடகா  (11.25%), உத்திரப் பிரதேசம் (11.25%) மற்றும் தமிழ் நாடு (5.83%).