“வாழ்க்கையில பிரச்சினை இல்லைனா மகிழ்ச்சி கிடைக்காது” – பெட்ரோல் விலைக்கு பாஜக அமைச்சர் சொன்ன அருமையான தத்துவம்!

 

“வாழ்க்கையில பிரச்சினை இல்லைனா மகிழ்ச்சி கிடைக்காது” – பெட்ரோல் விலைக்கு பாஜக அமைச்சர் சொன்ன அருமையான தத்துவம்!

கொரோனாவுக்கு அடுத்தப்படியாக நாட்டின் தலையாய பிரச்சினையாக பெட்ரோ, டீசல் விலை உயர்வு உருவெடுத்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு போடப்பட்டும் ஏன் இந்தளவிற்கு விலை ஏறிக்கொண்டிருக்கிறது என தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். தற்போது தளர்வுகள் வேறு அறிவிக்கப்பட்டதால் பெட்ரோலின் விலை சதத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் கூட இவ்வாறு விலையேறிக் கொண்டிருப்பது மத்திய அரசின் மீது மக்களைக் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. விலையேற்றத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன.

“வாழ்க்கையில பிரச்சினை இல்லைனா மகிழ்ச்சி கிடைக்காது” – பெட்ரோல் விலைக்கு பாஜக அமைச்சர் சொன்ன அருமையான தத்துவம்!

இதற்கு விளக்கம் கொடுக்கும் மத்திய அரசு சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றம் செய்வதாகவும், டிமாண்ட் செய்வதாகவும் கூறுகிறது. ஆனால் அதற்கு விதிக்கப்படும் வரி குறித்து மட்டும் வாய் திறப்பதில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தால் வரியைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைப்பதற்குத் தானே அரசு என எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சிக்கின்றனர். மத்திய அரசு ஒருபுறமென்றால் மாநில அரசுகளும் தன் பங்கிற்கு வரி விதிக்கின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

“வாழ்க்கையில பிரச்சினை இல்லைனா மகிழ்ச்சி கிடைக்காது” – பெட்ரோல் விலைக்கு பாஜக அமைச்சர் சொன்ன அருமையான தத்துவம்!

பெட்ரோல் விலை உயர்வு குறித்து ஆளுங்கட்சியான பாஜக தலைவர்களிடையே கேள்வியெழுப்பப்படுகிறது. ஆனால் அவர்களோ பொறுப்பற்ற தன்மையுடன் பதில் சொல்கிறார்கள். அந்த வகையில் தற்போது அந்த பொன்னான கருத்தை உதிர்த்திருப்பவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஓம் பிரகாஷ் சக்லேச்சா. பொதுவெளியில் தோன்றிய அவரிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “வாழ்க்கையில் மிகவும் சிக்கலான தருணங்கள் நமக்கு மகிழ்ச்சியின் உன்னதத்தை உணர்த்துகின்றன. வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படா விட்டால் நம்மால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாது” என்று சொல்லி பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

பாஜக தலைவர்களிடம் மைக்கை நீட்டினாலும் சரி, பொதுவெளியில் பேசும்போதும் சரி அள்ள அள்ள குறையாத அமிர்தமாக நெட்டிசன்களுக்கு கன்டென்ட் தருவார்கள். உயரிய பொறுப்புகளில் இருக்கும் அவர்கள் மிகவும் பொறுப்பற்றத்தனமாகப் பதில் கூறுவதின் விளைவே அவர்கள் சமூக வலைதளங்கள் சிக்கிச் சின்னாபின்னமாகி போவதற்கான காரணம். வழக்கம்போல ஓம் பிரகாஷை நெட்டிசன்கள் கிழித்து தொங்கவிட்டுள்ளனர். கடந்த வாரம் மற்றொரு மபி அமைச்சரான இந்தர் சிங் பர்மர் (கல்வித்துறை), தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் தொடர்பாக புகார் கொடுக்க வந்த பெற்றோரிடம், “ஸ்கூல் பீஸ் கட்ட முடியலேன்னா போய் சாவு” என்று கூறியிருந்தார்.